ரோல்ஸ் ராய்ஸ் காரை விற்றுவிட்டு தளபதி விஜய் வாங்கியிருக்கும் புது கார் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் இருக்கும் பல்வேறு நடிகர், நடிகைகள் சொகுசு கார்களை தான் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பிரபலங்கள் Audi, Bmw, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்து இருந்த பிரபலம் விஜய்.
இவரிடம் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது. அதில் இவரிடம் விலை அதிகமான காரில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார். இதை கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து விஜய் இறக்குமதி செய்திருந்தார். அதோடு இந்த காருக்கு இறக்குமதி வரி, நுழைவு வரி கட்ட வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், விஜய் இறக்குமதி வரி மட்டும் கட்டி இருந்தார். பின் அந்த காருக்கு நுழைவு வரி ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
விஜய் சொகுசு கார் :
இது மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. கடைசியில் விஜய் பக்கம் தான் தீர்ப்பு கிடைத்தது. இப்படி விஜய்க்கும் ரோல்ஸ் ராய்ஸ் காருக்குமே ஏழாம் பொருத்தமாக இருந்தது. இதனால் விஜய்க்கும் கெட்ட பெயர் வந்தது. பின் சமீபத்தில் தான் அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை செகனண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு விட்டார் விஜய். ஆனால், இந்த காரை விஜய் எதற்காக விற்கிறார்? என்ற விபரம் தான் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் வாங்கிய புது கார்:
இந்த நிலையில் நடிகர் விஜய் புது காரை வாங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் விஜய் அவர்கள் Lexus LM மாடல் காரை தான் வாங்கி இருக்கிறார். இதனுடைய விலை 2 கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய் வீட்டில் இருந்து இந்த புது கார் வெளியே வந்திருக்கும் வீடியோ தான் இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.
Thalapathy Vijay's New Car
— தளபதீ🔥🔥🔥 (@TVK83540384) August 13, 2024
" Lexus LM 2024 "#ThalapathyVijay #LexusLM #Lexus#Kottukkaali #KottukkaaliFromAug23#TheGOATTrailer #TheGOATFestival #TheGreatestOfAllTime #TheGoatArrivesOnSept5th #Kanguva #KanguvaFromOct10 #KanguvaTrailer #Soori #Sivakarthikeyan #AnnaBen pic.twitter.com/HHMwMYHZod
விஜய் திரைப்பயணம்:
இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப் பெரிய வசூல் சாதனை படைத்தது. லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த், லைலா,சினேகா, பிரபுதேவா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
கோட் படம்:
தற்போது படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். முதலில் விசில் போடு என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பின் சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகி இருந்தது. இந்தப் பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. சமீபத்தில் ‘ஸ்பார்க்’ என்ற பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.