படப்பிடிப்பில் நடந்த மோசமான விபத்து.! விஜய் வசந்த் மருத்துவமனையில் அனுமதி ! வீடியோ இதோ

0
402

சினிமாவில் நடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான விடயமெல்ல. நாம் நினைப்பது போல சினிமாவில் உள்ள நடிகர்,நடிகைகள் சிரமப்படாமல் நடித்துவிடுவது இல்லை. ஒரு சில சமயங்களில் படப்பிடிப்பின் போது அவர்களுக்கும் ஒரு சில விபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றது.

vasanth

இந்நிலையில் தமிழ் சினிமா நடிகர் விஜய் வசந்திற்கு படப்பிடிப்பின் போது காலில் படு மோசமாக காயம் ஏற்பட்டுள்ளதாக கூறபடுகிறது. தற்போது விஜய் வசந்த் ‘மை டியர் லீசா’ என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது இவருக்கு காலில் பயங்கர காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சமீபத்தில் தனக்கு காயம் ஏற்பட்டுள்ளதை வீடியோ பதிவு எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விஜய் வசந்த் “கடந்த வாரம் நடைபெற்ற சம்பவத்தை நான் மறக்கமாட்டேன். என்னுடைய அடுத்த படமான “மை டியர் லீசா ” படத்தின் சண்டை காட்சிகளை எடுத்த போது, விபத்து ஏற்பட்டு என்னுடைய இடது கால் முறிந்து விட்டது.

ஒரு சில இரும்பு தகடுகள் மற்றும் ஸ்க்ரரூக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. சீராகும் நேரம் தொடங்கவிட்டது. நான் விரைவில் குணமடைய உங்களின் பிரார்த்தனைகளையும் , அன்பையும் வேண்டுகிறேன். நன்றி ‘ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு காலில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளதால் “மை டியர் லீசா” படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.