மகன் மூலம் கஜா புயல் பாதிப்பிற்கு உதவிய கேப்டன்..!நடிகர்களிலேயே கேப்டன் செய்த உதவி தான் அதிகம்..!

0
560
Vijayakanth

தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார்.இருப்பினும் தற்போது நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

Shanmugapadni

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜயகாந்த் தனது மகன் சுந்தரபாண்டி மூலம் உதவி கரத்தை நீட்டியுள்ளார்.தமிழகத்தில் ஏற்பட்ட ‘கஜா’ புயல் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மக்கள் அனைவரும் நிவாரண முகாம்களின் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.கஜா புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான டெல்டா பகுதி மக்களுக்கு, திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து பொருளுதவி, நிதியுதவி அளித்து வருகின்றனர்.

Shanmugapadni

பல்வேறு நடிகர்கள் நிதியுதவி அளித்திருந்தாலும் நடிகர் விஜயகாந்த் நடிகர்களிலேயே அதிக நிதியுதவியாக 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனை விஜயகாந்தின் மகன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறையை கேட்டு உதவி செய்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.