குலக்கல்வி முறை பற்றி நடிகர் விஜயகுமார் பேசி இருக்கும் இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை புரசைவாக்கத்தில் முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள் விழா நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சி அமைச்சர் சேகர் பாபு தலைமையில் தான் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக பிரபலங்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து இருந்தார்கள். இந்த நிலையில் இந்த விழாவில் நடிகர் விஜயகுமார் கலந்துகொண்டு இருந்தார்.
https://www.youtube.com/watch?v=s0iOdKZinLI
அப்போது விழாவில் பேசிய விஜயகுமார், என்னுடைய ஊர் பட்டுக்கோட்டை. நான் படிக்கும்போது முதல்வராக ராஜாஜி இருந்தார். அப்போதுதான் குலக்கல்வி முறை அமலுக்கு வந்தது. பாதி நேரம் படிக்க வேண்டும், பாதி நேரம் வேலை பார்க்க வேண்டும். அதுதான் குலக்கல்வி. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். அதனால் நான் என்னுடைய படிப்பை எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டேன். இந்த குல கல்வி முறையால் நிறைய பேர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
குலக்கல்வி பற்றி சொன்னது:
அதில் நானும் ஒருவன். ஆனால், இப்போது தமிழ்நாட்டின் முதல்வர் அனைவரும் படிக்க வேண்டும் என்று மதிய உணவு மட்டும் இல்லாமல் காலை உணவும் வழங்குகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். கல்விக்காக முதல்வர் ஸ்டாலினை விட வேறு யாரும் இப்படி செயலாற்ற முடியாது என்றெல்லாம் கூறியிருக்கிறார். இப்படி விஜயகுமார் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

விஜயகுமார் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.

விஜயகுமார் திரைப்பயணம்:
அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

விஜயகுமார் குடும்பம்:
இதற்கிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தான் முதல் மனைவி. அதன் பின்னர் தான் விஜயகுமார் 1976ல் அதன் மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. நடிகை மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. இதில் அருண்குமார் தான் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.






