தெருவில் நைட்டியுடன் சண்டை..! மகள் மீது போலீசில் புகார் கொடுத்த விஜயகுமார் ! இதுக்கா இப்படி.!

0
1697

பிரபல நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதாவிற்கும் பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரச்சனை ஏற்பட்ட விடயம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நடிகை வனிதா மீது மதுரவாயில் காவல் நிலையத்தில் நடிகர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.

vinitha

- Advertisement -

சென்னை, மதுரவாயில் ஆலப்பாக்கம் பகுதியில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் அவரது 5 மகள்களில் ஒருவரான நடிகை வனிதா சில வருடங்களாக வாடகைக்கு வசித்து வருகிறார்.படப்பிடிப்பிற்காக நடிகை வனிதா, வீட்டை குத்தகைக்கு எடுத்த நிலையில் குத்தகை முடிந்து நீண்ட காலமாகியும் வனிதா வீட்டை காலி செய்ய மறுக்கிறார் என்று விஜயகுமார் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மதுரவாயில் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், என்னுடைய மனைவி மஞ்சுளாவுக்குச் சொந்தமான வீட்டை வனிதாவுக்கு லீசுக்கு கொடுத்துள்ளேன். வீட்டுக்குள் நுழைந்த அவர், அங்கிருந்து வெளியில் செல்ல மறுக்கிறார். எனவே, அந்த வீட்டை அவரிடமிருந்து மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Actress vinitha

இதையடுத்து, நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். பிரபல நடிகராக இருக்கும் விஜயகுமார், மகள் மீதே போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement