எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார் நடிகர் விக்ரம். தென்னிந்தியா சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். இவர் சினிமாவில் இந்த உயரத்தை அடைய பல கட்டங்களை கடந்து தான் வந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் தான்.கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”. இவர் முதலில் டப்பிங் ஆர்டிஸ்டாக தான் சினிமாவில் பணியாற்றினார்.
அதில் அஜித், பிரபு தேவா, அப்பாஸ் என்று பல நடிகர்களுக்கு வாய்ஸ் கொடுத்து உள்ளார். விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்னவோ 1999 ஆம் ஆண்டு வெளியான 'சேது' திரைப்படம் தான்.

சேது திரைப்படத்திற்கு முன்னர் இவர் நடித்த திரைப்படம் தான் 'ஹவுஸ் புள்'. இந்த திரைப்படத்தை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தான் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன், சுவலக்ஷ்மி, வடிவேலு என்று பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.





