நடிகர் விக்ரம் தனது மனைவி குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரைஉலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனக்கு என ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழிகளிலும் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் விக்ரம் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து இன்றும் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும், சியான் விக்ரம் என்றாலே நடிப்புக்காக எப்பேர்பட்ட கதாபாத்திரத்தையும் துணிந்து செய்வார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். தனது தொடக்க காலங்களில் கொஞ்சம் தடுமாறினாலும் சாமி, தில், ஐ, ஜெமினி, அந்நியன், பொன்னியின் செல்வன் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் நடிகர் விக்ரம்.
தங்கலான்:
கடைசியாக நடிகர் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கேஜிஎஃப் இல் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, சதீஷ் நடிகர் டேனியல் கால்கிரோன் என்ன பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது.
விக்ரம் நடிக்கும் படங்கள்:
ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். தங்கலான் படத்தை தொடர்ந்து தற்போது , ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது, விக்ரம் ‘வீர தீர சூரன்’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விக்ரம் குடும்பம்:
நடிகர் விக்ரம் சைலஜா என்பவரை காதலித்து கடந்த 1992 ஆம் ஆண்டு குருவாயூர் கோவையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவ் என்ற மகனும், அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர். விக்ரமின் மகள் திருமணம் செய்து கொண்ட நிலையில், மகன் துருவ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதல் முதலில், ‘ஆதித்யா வர்மா’ படத்தில் தான் நடித்திருந்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ திரைப்படத்தில் துருவ் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மனைவி குறித்து நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.
மனைவி குறித்து விக்ரம்:
அதில், என் மனைவி சைலஜாவின் குடும்பத்தினர் பாடலாசிரியர் மற்றும் கல்வியாளர்களாக இருந்தவர்கள். இதனால் என் மனைவி ஆரம்ப காலங்களில் நான் சினிமாவில் நடிப்பதை விரும்பவில்லை. ஆனால், நான் என் மனைவியின் வற்புறுத்தலை நிராகரித்து, சினிமா தான் வாழ்க்கை என்று உறுதியாக நின்றேன். அதைப் புரிந்து கொண்ட எனது மனைவியும் என்னுடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். நான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததற்கு காரணமே என் மனைவி தான் என்று தன் மனைவி குறித்து பெருமையாக விக்ரம் பேசியுள்ளார்.