ஜெயம் ரவி- ஆர்த்தி குறித்து விக்ரம் பேசி இருந்த பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமந்தா-நாக சைதன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ்-சைந்தவியை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமண பந்தத்தில் இருந்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார்.
ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:
இதை அடுத்து ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் பிரிந்தார்கள் என்றெல்லாம் பல செய்திகள் வருகிறது. மேலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் பேசாதீங்க. கெனிஷா வாழ்க்கையில் சொந்தமாக கஷ்டப்பட்டு முயற்சி இந்த இடத்திற்கு வந்தவர். நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருந்தார்.
ஜெயம் ரவி பேட்டி:
இதை அடுத்து சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கேள்விக்கு கெனிஷாவும் பதிலடி கொடுத்து இருந்தார்.
அதேபோல் தன்னுடைய உடமைகள் எல்லாம் மீட்டு தர சொல்லி ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து பயில்வான் ரங்கநாதன் எடுத்த பேட்டியில் கூட ஜெயம் ரவி, என்னுடைய மனைவி என் மகன்களுக்கு தெரியாது. அவர் எப்போதும் அவருடைய அம்மா தா.ன் என் மகன்களுக்கு எந்த ஒரு தவறான செய்தி தெரியக்கூடாது என்று தான் நான் பேசவில்லை.
விக்ரம் வீடியோ:
இந்த விஷயத்தில் என்னுடைய மாமியார் தான் ரொம்ப கொடுமைக்காரர். ஆர்த்தி தேவையில்லாத வேலைகளை செய்கிறார். என்னுடைய எல்லா சொத்துக்களையும் அவரிடம் தான் இருக்கிறது. யாருக்காகவும் என்னுடைய கேரியரை அழித்துக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் சொன்னதாக கூறியிருந்தார். இப்படி நாளுக்கு நாள் ஜெயம் ரவி விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியின் பழைய வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. அதில், விருது விழா ஒன்றில் மேடையில் விக்ரம், என்னிடம் அப்போது செலவிற்கு பணம் இல்லை.
உண்மையாத்தான் சொல்றானோ!! அவசரப்பட்டு ரவிய அடிச்சிட்டாங்களா? https://t.co/9ke877yGlS pic.twitter.com/sQGAHx6h6J
— Batman அ இருந்துக்க (@_D_Resist) September 26, 2024
ஜெயம் ரவி பற்றி சொன்னது:
உடேன ஜெயம் ரவியிடம் கேட்டேன். அவர் என்னிடம் 500 ரூபாய் தான் இருக்கிறது. இருங்கள் என் மனைவியிடம் கேட்டு வாங்கி வருகிறேன் என்று சொல்லி ஆர்த்தியிடம் தான் வாங்கி தந்தார். எல்லாமே அவர் ஆர்த்தியிடம் தான் கேட்பார் என்று சொல்ல ஜெயம் ரவி கீழே உட்கார்ந்து சிரிக்கிறார். தற்போது இதை பார்த்த நெட்டிசன்கள், ஜெயம் ரவி சொன்னது உண்மையாகத்தான் இருக்கும் போல, பாவம் மனுஷன். ஆர்த்தி தான் தேவையில்லாத வேலை செய்கிறார். ஆர்த்தி டார்சலினால் தான் ஜெயம் ரவி இப்படி ஆனார் என்றெல்லாம் அவருக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.