8 மாத கர்ப்பிணியாக இருந்தும் கடந்த வாரம் வரை டாக்டர் சேவை. எழுந்து நின்று கைதட்டிய டாக்டர்கள். மனைவி குறித்து விமல் நெகிழ்ச்சி.

0
193262
vimal
- Advertisement -

தமிழில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விமல் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வந்தார். தமிழில் இவர் நடித்த களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. சமீபத்தில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இப்படி விமலுக்கு சமீப காலமாக போறாத காலமாக இருக்க கடந்த இரன்டு தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் ஹீரோவானார் நடிகர் விமல். தற்போது உலகம் முழுவதும் வைரஸ் தொற்றால் ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன் உயிரை கொடுத்திருக்கிறது இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவை பொருத்தவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1834 ஆக உயர்ந்திருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது மேலும் தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், நடிகர் விமல் தனது சொந்த ஊரான மணப்பாறையில் நண்பர்களுடன் களம் இறங்கி வீதியில் கிருமிநாசினி தெளித்தார்.

-விளம்பரம்-
Vemal (Actor) Wiki, Biography, Age, Family, Movies, Images - News Bugz

இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள விமல் கூறுகையில், மக்களுக்காக அரசாங்கம் நிறைய உதவிகளை செய்து கொண்டு வருகிறது முடிந்த அளவிற்கு என்னால் செய்ய முடிகிற காரியங்களை செய்து கொண்டு வருகிறேன்.நானும் சில இளைஞர்களும் சேர்ந்து தெருத்தெருவாக போய் கிருமிநாசினி தெளித்துக் கொண்டு வருகிறோம் அதுதவிர என்னுடைய மனைவி டாக்டர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள் இப்போது 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறார்.

முதன் முறையாக வெளியான, நடிகர் ...

நிறை மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்ததால் மருத்துவமனை அவர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். ஆனால், போன வாரம் வரை வேலையில்தான் இருந்தார்கள் இந்த நேரத்திலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் அவர் செய்ததை பார்ப்பதை கண்டு நிறைய டாக்டர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். இதுவே எனக்கு பெரிய சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் விமல்.

Advertisement