முதன் முறையாக தன் மனைவியை வெளியுலகத்துக்கு காட்டிய நடிகர் விமல் ! புகைப்படம் உள்ளே

0
5354
vimal
- Advertisement -

பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் நடிகர் விமல். களவாணி மற்றும் வாகை சூடவா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் சற்று பிரபலம் ஆனார். ஆனால் இதற்கு முன்னர் கில்லி மற்றும் கிரீடம் போன்ற படங்களில் நடித்துள்ளார் விமல்.

vimal actor

இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு தனது பால்ய கால தோழி அக்சயா உடன் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் இந்த திருமணம் ஒரு பெரிய ரன்னிங்-சேஸிங் திருமணம் ஆகும்.

- Advertisement -

இவர் விமலின் குழந்தை பருவ நம்பர். சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார் ஆக்சயா.அப்போது அடிக்கடி அக்சயாவை பார்க்க அவரது கல்லூரிக்கு செல்வார் விமல். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது.

actor-Vimal-children-son

Actor-vimal-wife

இதனை பார்த்த அக்சயாவின் பெற்றோர்.எனது மகள் ஒரு டாக்டர். அவளுக்கு ஒரு டாக்டரைதான் திருமணம் செய்து வைப்போம் என அக்சயாவிற்கு மாப்பிள்ளை பார்க்க துவங்கியுள்ளனர். மேலும், ஒரு நடிகருக்கு எங்கள் பெண்ணை தரமட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

அப்போது கும்பகோணத்தில் ‘எத்தன்’ பட சூட்டிங்கில் இருந்தார் விமல். தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என தெரிந்ததும் இரவோடு இரவாக இரயில் ஏறி கும்பகோணம் வந்துவிட்டார் அக்சயா. அங்கு ஒரு முருகன் கோவிலில் வைத்து அக்சயாவை திருமணம் செய்துகொண்டார்.

akshya

vimal-

vimal-wife

இப்படியாக பரபரப்பாக திருமணம் செய்துகொண்டார் விமல். தற்போது இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement