பிரபல நடிகர் வினித் என்ன ஆனார் தெரியுமா ! தற்போதைய நிலை ! புகைப்படம் உள்ளே

0
3346
vineeth

1992ஆம் ஆண்டு ‘ஆவாரம்பூ’ என்ற படத்தில் ‘சக்கரை’ என்ற கேரக்டரில் நடித்திருப்பார் வினித். இந்த சக்கரை கேரக்டர் இன்று வரை பேசப்படும் கேரக்டராகும். இந்த வினித் யார் தெரியுமா? தற்போது என்ன செய்து வருகிறார் தெரியுமா?

actor-vinith

வினித் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் கண்ணூரில் ஒரு பிரபலமான குடும்பம் ஆகும். அப்பா கே.டி ராதாகிருஷ்ணன் ஒரு வழக்கறிஞர் ஆவார். அம்மா சாந்தகுமாரி ஒரு டாக்டர் ஆவார். நாட்டியப் பேரொளி ‘பத்மினி’ வினித்திற்கு சொந்தக்காரர் ஆவார்.

அதற்கேற்றார் போலவே வினித் சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தில் கை தேர்ந்தவராக வளர்ந்துள்ளார். கேரளாவில் தொடர்ந்து 4 ஆண்டுகள் இளைஞர் விழாவில் கலந்துகொண்டு நாட்டியம் ஆடி விருதினை வென்றுள்ளார்.

actor-vineeth

சூப்பர்ஸ்டாரின் சந்திரமுகி படத்தில் நடித்த வினித் செம்மயாக பரதநாட்டியம் ஆடியிருப்பார். 1984ஆம் ஆண்டு ‘இடனிலங்கள்’ என்ற மலையாள படத்தில் அறிமுகம் ஆனார். ஆனால் தமிழில் 1992ஆம் ஆண்டு ‘ஆவாரம்பூ’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுக நடிகர் என்ற விருதினை பெற்றார் வினித்.

actor-vineeth daughter

actor-vineeth-family

அதன்பின்னர், ஜெண்டில் மேன், ஜாதி மல்லி, மே மாதம், காதல் தேசம் சக்தி ஆகிய படங்களில் ஹீரோவாகவும் காதல் கிறுக்கன், பிரியமான தோழி, சந்திரமுகி என பல படங்களில் துணை நடிகராகவும் நடித்து வந்தார் வினித்.

மேலும் 100கும் மேற்ப்பட்ட படங்களுக்கு டான்ஸ் கோரியோகிராபராகவும் இருந்துள்ளார் வினித். கடைசியாக கம்போஜி என்கிற மலையாள படத்தில் நடித்த வினித்திற்கு கடந்த 2004ஆம் ஆண்டு பிரிசில்லா மேனன் என்பவருடன் திருமணம் ஆனது.

Actor-vineeth

இவர்களுக்கு அவந்தி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் வினித்