அர்ஜூன் படத்தில் நடிகர்களாக அறிமுகமாகும் 2 பிரபல நடிகர்களின் தந்தைகள். ஒருத்தர் விஷால் தந்தை. இன்னோருத்தர் யார் தெரியுமா?

0
421
arjun
- Advertisement -

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கும் படத்தில் மிகப்பிரபலமான இரண்டு நடிகர்களின் தந்தைகள் அறிமுகமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாகமாக ஆக்சன் கிங் என்ற பட்டத்துடன் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் அர்ஜுன். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்சன், தேசப்பற்று பாணியில் தான் இருக்கும். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அதிலும் சமீபகாலமாக இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தற்போது ஆக்சன் கிங் நடிக்கும் புது படத்தின் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இன்னும் இந்த படத்திற்கு டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தை தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கி வருகிறார் அருள்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இதையும் பாருங்க : தான் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நதியா. (அப்பயும் இப்பயும் ஒரே மாதிரி தான் இருக்காங்க)

- Advertisement -

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு எல்லாம் தொடங்கியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இந்த படத்தில் ஜிகே ரெட்டி மற்றும் லோகு ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாக இருக்கின்றனர். ஜிகே ரெட்டி வேற யாரும் இல்லைங்க பிரபல நடிகர் விஷாலின் தந்தை. விஷாலும் அவருடைய தந்தை இருவருமே உடற்பயிற்சி மீது ஆர்வம் உடையவர்கள். இந்த 82 வயதிலும் ஜிகே ரெட்டி உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி உடலை கட்டுகோப்பாக வைத்து இருக்கிறார் என்று FIT India அமைப்பின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Image

அதேபோல் லோகு என்பவர் பிரபல நடிகர் கதிரின் தந்தை ஆவார். மேலும், இந்த இரண்டு பிரபல நடிகர்களின் தந்தைகள் படத்தில் அறிமுகமாக இருப்பதால் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ்– அர்ஜுன் காம்போவில் வெளியாகும் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement