தான் சினிமாவில் அறிமுகமான முதல் படத்தின் போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நதியா. (அப்பயும் இப்பயும் ஒரே மாதிரி தான் இருக்காங்க)

0
1672
nadhiya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை நதியா. இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானர். பின் இவர் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் கொண்டவர் நடிகை நதியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு சனம், ஜனா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

இதையும் பாருங்க : அட மீனா, குஷ்பூவ விடுங்க 26 ஆண்டுகளுக்கு முன்னரே ரஜினி படத்தில் நடித்துள்ள அண்ணாத்தா அப்பத்தா.

- Advertisement -

பின் நடிகை நதியா அவர்கள் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட இவர் M குமரன் S/o மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் மீண்டும் இவர் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் இடைவெளி ஆனாலும் நடிகை நதியா அவர்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து இருக்கிறார்.

அப்பொழுது பார்க்கும் போது நடிகை நதியா அவர்கள் எப்படி இருந்தாரோ அப்படியே இப்பவும் காட்சி அளிக்கிறார். இவருடைய அழகை பார்த்து பல பேர் நீங்கள் இன்னும் கதாநாயகியாக நடிக்கலாம் என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தான் நடித்த முதல் மலையாள படத்தின் போது எடுத்த புகைப்பங்களை பதிவிட்டுள்ளார். ஆனால், அப்போதும் இப்போதும் பெரிதாக வித்யாசம் இல்லாமல் தான் தோற்றமளிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement