சின்னத்திரைக்கு வருகிறாரா விஷால்..? எப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு தெரியுமா..? வெளிவந்த தகவல்..!

0
397
Actor-vishal

தமிழ் சினிமா நடிகர் சங்க தலைவரான விஷால் படு பிஸியாக இருந்து வருகிறார். சமீப காலமாக அரசியல், சினிமா துறை ஸ்ட்ரைக் என்று பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார் விஷால். இந்நிலையில் நடிகர் விஷால் பிரபல தெலுகு டிவி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக கலந்துகொள்ள போகிறார் என்று ஒரு சில தகவல்கள் வெளியகியுள்ளது.

பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் “மேது சைத்தம்.” என்ற நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பிரபலமான நடிகர்ககளும், பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அதில் அவர்கள் சாதாரண மக்கள் செய்யும் வேலையை ஒரு நாள் செய்ய வேண்டும்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு முறை பாகுபலி புகழ் ராணா கூட பங்குபெற்று ஒரு நாள் சாதாரணமகவாழ்ந்து, மூட்டை தூக்கியுள்ளார். இதன் முதல் பாகம் படு ஹிட்டாக, இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். இதனால் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்க நடிகர் விஷாலுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

இது பற்றி விஷால் தெரிவிக்கையில், நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பற்றி இன்னும் முழுமையாக முடிவெடுக்கவில்லை, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து வெறும் ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை தான் நடந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். எனவே விஷாலை விரைவில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பார்த்தல் கூட ஆச்சர்யமில்லை