இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்காக பிரபல நடிகர் செய்த செயல். வைரலாகும் வீடியோ.

0
7940
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த கோர சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. அது ஒரு கருப்பு நாள். உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் என்று பலர் நடித்து வருகின்றனர். இந்தியன் 2 திரைப்படம் பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது.

-விளம்பரம்-

19-2-2020 ஆம் அன்று இரவு சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது படப்பிடிப்பின் போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும்,10 பேர் பலத்த படுகாயம் அடைந்து உள்ளனர். ராட்சத கிரேனில் அதிக எடை கொண்ட லைட்கள் அமைக்கப்பட்டிருந்தன. உயரத்தைக் குறைக்காமல் கிரேனை இயக்கியது விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த விபத்து ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது, நான் எத்தனையோ விபத்துக்களை சந்தித்து கடந்திருந்தாலும் இந்த விபத்து மிகக் கொடூரமானது. எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.

மேலும், இந்த விபத்தில் இறந்த குடும்பத்திற்காக கமலஹாசன் அவர்கள் நிதி உதவியும் செய்து இருந்தார். இது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்துள்ளனர். அதோடு கோலிவுட் முதல் டோலிவுட் வரை என பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்கி கொண்டிருக்கும் நடிகர் விஷால் அவர்கள் தற்போது சக்ரா என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த சக்ரா படக்குழுவில் இருந்து தங்களுடைய இரங்கலை தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை தனது விஷால் பிலிம் பேக்டரி பக்கத்தில் இருந்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement