நடிகர் விஷால் திருமணம் செய்ய இருக்கும் பெண் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் செய்திருக்கிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார். கடைசியாக விஷால்- சுந்தர்.சி கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா.

தற்போது நடிகர் விஷால் அவர்கள் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. 40 வயதாகியும் முரட்டு சிங்கிளாகவே விஷால் இருக்கிறார். அதோடு நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் விஷால் என்று கூறியிருந்தார். பின் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் விஷால், நடிகர் சங்க கட்டிடம் தான் என்னுடைய கனவு. அதை கட்டி முடித்த பின்பு திருமணம் செய்வேன் என்று அறிவித்தேன். அதை ஒரு சவாலாகவும் எடுத்துக் கொண்டுதான் செயல்பட்டேன்.
விஷால் திரைப்பயணம்:
முதலில் வெறும் மூன்று ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டிடம் முடித்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், 9 ஆண்டுகள் வந்துவிட்டது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க இருக்கிறோம்.
அநேகமாக அடுத்த நான்கு மாதங்களில் என்னுடைய திருமணம் நடப்பதும் உறுதி. என்னுடைய பிறந்த நாளில் கூட திருமணம் நடக்கும். பெண் எல்லாம் பார்த்து முடித்து பேசி விட்டோம். இது முழுக்க முழுக்க காதல் திருமணம் தான். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். ஆனால், அந்த பெண் யார் என்பதை கூடிய விரைவிலேயே சொல்கிறேன் என்று வெட்கத்துடன் கூடியிருந்தார்.

விஷால் திருமணம்:
இப்படி இருக்கும் விஷால் திருமணம் குறித்த அப்டேட் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது, யோகி டா படத்தினுடைய செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக விஷால் பங்கேற்று இருந்தார். அதுமட்டுமில்லாமல் இன்று காலையில் இருந்தே சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் பேசப்பட்டது. படத்தின் விழாவில் பங்கேற்ற பலருமே விஷால் திருமணத்தை குறித்து தான் சூசகமாக பேசி இருந்தார்கள். அப்போது இயக்குனர் பேரரசு, இது படவிழாவா, நிச்சயதார்த்த விழாவா தெரியவில்லை. விஷால் சார் எனக்கு வருத்தம்.கொஞ்ச நாள் கிசுகிசுவை ஓட விட்டு, அதுக்கப்புறம் தான் இதை சொல்லணும்.

தன்ஷிகா சொன்னது:
நீங்க பொசுக்கனும் வந்து ஜோடியா உட்கார்ந்துட்டீங்களே, நேரா கிளைமாக்ஸ் இப்பவே விட்டுட்டீங்களே என்று கூறியிருந்தார். இதன் மூலம் விஷால்-தன்ஷிகா தான் திருமணம் உறுதியாகிவிட்டது. பின் மேடைக்கு வந்த விஷால், தன்ஷிகா இருவருமே தங்களுடைய திருமண தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு ஆகஸ்ட் 29ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. பின் விழாவில் பேசிய சாய் தன்சிகா, இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான நாள்.. 20 வருஷமாக இந்த நாளுக்காக காத்திருந்தோம். இன்னைக்கு காலையில் ஒரு செய்தியை பார்த்திருந்தோம். அதை பார்த்த பிறகும் கூட 15 வருடமாக நம்ம நண்பர்கள், இனியும் நம் நண்பர்களாக இருப்போம்னு சொல்லியிருந்தோம்.
https://www.youtube.com/watch?v=jsAAU86Fcc0
விஷால் சொன்னது:
15 ஆண்டுகளாக நண்பர்களாக, உறவினர்களாக இருந்தோம். நாங்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் பண்ணிக் கொள்கிறோம் என்று கூறியிருந்தார். அதற்குப்பின் விஷால், பேரரசு சார் கிசுகிசு எல்லாம் போதும் சார். நாங்கள் இருவரும் கண்டிப்பாக வடிவேல்- சரளா அம்மா மாதிரி இருக்க மாட்டோம். எங்களுக்குள் ஒரு நல்ல புரிதல் இருக்கு. இந்த படத்தோட ஆக்ஷன் காட்சியை பார்க்கும்போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கு. அவங்களோட அப்பாவும் இங்கதான் இருக்கிறார். அவர் ஆசிர்வாதத்துடன் இங்கு அறிவிக்கிறேன். I'm going to marry Sai Dhanshika. இதை தவிர எங்க ரெண்டு பேரு பத்தி பேசி இந்த நிகழ்வை எடுக்க விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார்.






