‘மீண்டும் மாமாவாகிட்டேன்’ சந்தோஷத்தில் விஷால் பதிவிட்ட டீவ்ட், குவியும் வாழ்த்துக்கள் – விஷாலுக்கு இவ்வளவு அழகான தங்கையா.

0
651
- Advertisement -

தான் மீண்டும் மாமாவான மகிழ்ச்சிகரமான செய்தியை விஷால் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சோசியல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார். மேலும், சினிமா தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகன் தான் விஷால். அனைவருக்கும் இவருடைய முதல் திரைப்படம் செல்லமே என்று தான் நினைத்து உள்ளார்கள். ஆனால், அது தவறு.

-விளம்பரம்-

அதற்கு முன்னரே 1989ல் நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளி வந்த ‘ஜாடிக்கேத்த மூடி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷால் அவர்கள் நடித்து உள்ளார். இந்த படத்தில் தயாரிப்பாளர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தான். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலில் பாண்டியராஜனுடன் சில நொடிகள் மட்டும் நடிகர் விஷால் நடனம் ஆடி உள்ளார். அதற்கு பிறகு தான் இவர் செல்லமே என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

- Advertisement -

விஷாலின் திரைப்பயணம்:

பின் நடிகர் விஷால் அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். இரும்புதிரை படத்திற்க்கு பின்னர் விஷால் நடிப்பில் வெளியான எந்த படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. அதோடு தமிழில் சினிமாவில் இவரை புரட்சி தளபதி என்று தான் பட்டப்பெயரை வைத்து அலைகிறார்கள்.

விஷாலின் வீரமே வாகை சூடும் படம்:

மேலும், அனைவரும் எதிர்பார்த்து இருந்த விஷாலின் வீரமே வாகை சூடும் படம் பிப்ரவரி மாதம் தான் வெளியாகியுள்ளது. இந்த படத்தை து.பா. சரவணன் இயக்கி இருக்கிறார். இப்படத்தை விஷால் பிலிம் ப்ரோடக்சன் சார்பாக விஷால் தயாரித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி , யோகி பாபு, ரமணா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

விஷால் நடிக்கும் லத்தி படம்:

இதனை அடுத்து விஷால் அவர்கள் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தங்களது ராணா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் நடிகர் விஷால் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பெஷலான பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அது என்னவென்றால்,

விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது:

விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தங்கைக்கு பெண் குழந்தை பிறந்து விட்டதாக அறிவித்து கூறியிருப்பது, இதைவிட என்ன கேட்டு விட முடியும். மீண்டும் மாமா வாகி இருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி. என்னுடைய தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய இளவரசியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் விஷால் இன்ஷா அல்லா என்று பதிவிட்டு இருப்பதற்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement