என் நண்பர் அன்பில் மகேசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னன்னா -PSBB விவகாரத்தில் விஷால் ஆவேசம்.

0
9084
vishal
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. பல்வேறு மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்துப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

-விளம்பரம்-

அதே போல தொடர்ந்து ராஜகோபாலன் மீது மாணவிகள் புகார் அளித்து வருவதால் அவரின் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜகோபாலனுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷால் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : செல் போன் இருந்திருந்தால் ரயில்வே ஸ்டேஷன் சீன்லாம் வந்தே இருக்காது. குஷி படத்தை பற்றி சொன்ன நபர். எஸ் ஜே சூர்யா அளித்த செமையான விளக்கம்.

- Advertisement -

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்களிடமும் பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன்.

Image

இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும். குறைந்தது இப்போதாவது மாணவர்களிடமமும் பெற்றோரிடமும் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்.” என்று கூறியுள்ளார் விஷால்.

-விளம்பரம்-
Advertisement