தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து பலேபாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலும் சமீபகாலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் ‘எப்.ஐ.ஆர்’. இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் இந்த படம் ஒடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது.
விஷ்ணு விஷால் – ரஜினி நடராஜ் திருமணம்:
ஆனால், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் திரையரங்களில் இந்த படம் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தன் மகனின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் – ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார்.
விஷ்ணு விஷால் – ரஜினி நடராஜ் விவாகரத்து:
இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தன் மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டார் நடிகர் விஷ்ணு. இது விஷ்ணு விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. பின் நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் காதலில் இருந்து வந்தார்.
விஷ்ணு விஷால் – ஜுவாலா திருமணம்:
பின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுவாலாவை விஷ்னு விஷால் திருமணம் செய்து கொண்டார். விஷ்ணு விஷால் தான் விவாகரத்து ஆனவர் என்று பார்த்தால் ஜுவாலாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் தான். பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா, சேத்தன் ஆனந்த் என்ற பேட்மிட்டன் வீரரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின் 6 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் 2011 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் மகனின் பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் :
மேலும், விஷ்ணு விஷால் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து இருந்தாலும் தனது மகனை பாசமாக பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் விஷ்ணு தனது மகனின் பிறந்தநாளை மிகவும் சிம்பிளாக வீட்டில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்து பலரும் விஷ்ணு மகன் இவ்வளவு பெரியவனாக வளர்ந்துவிட்டாரா! என்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் போட்டும் வருகிறார்கள்.