என்ன தல கரும்பூஞ்ஜயா ? விஷ்ணு விஷால் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள். உண்மையில் இதனால் தான் இப்படி ஆகிடிச்சி.

0
3451
vishnu
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்துள்ள எஃப்ஐஆர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதில் சிக்ஸ்பேக் வைத்து கட்டுமஸ்தான உடல் இருந்த விஷ்ணு விஷாலை கண்டு பலரும் வியந்து போனார்கள்.

-விளம்பரம்-

அதே போல சமீபத்தில் விஷால் தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதையும் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டிருந்தார். சமீப காலமாக கடினமான உடல் பயிற்சிகளை செய்து வருகிறார். அதே போல உடற் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் முதுக்குப் பகுதியில் வட்ட வட்டமாக காயங்கள் இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக் அடைந்தனர். அதிலும் ஒரு சிலரோ என்ன தல கரும்பூஞ்ஜய்யா, என்னய்யா முதுகுல பணியாரம் சுட்டு இருக்காங்க என்று கமன்ட் செய்து உள்ளனர். ஆனால், உண்மையில் இது Cupping (கப்பிங்) எனப்படும் ஒரு விதமான சிகிச்சை.

கப்பிங் தெரபி’ என்பது கப்பை (Cup) வைத்து செய்யப்படும் பண்டைய கால சிகிச்சை முறை.  ‘ரத்தம் குத்தி எடுத்தல்’ என்று என்று சொல்வார்கள். எகிப்தில்தான் இந்த கப்பிங் சிகிச்சை முறை பிறந்தது. நிறைய  பிரபலங்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இந்த சிகிச்சை மூலம் உடலில் உள்ள கரும் பித்தத்தை எடுக்கின்றனர். நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம் ((Blood), சளி (Phlegm), மஞ்சள் பித்தம் (yellow bile) மற்றும் கரும் பித்தம் (black bile). இதில் கரும் பித்தம் தான் நச்சுத்தன்மை உடையது.

-விளம்பரம்-
Advertisement