என் கணவர் விட்டு சென்றதை நான் தொடர்கிறேன் – விவேக்கின் நினைவு நாளில் அவரின் மனைவி உருக்கம்.

0
346
vivek
- Advertisement -

கோலிவுட்டில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார்.

-விளம்பரம்-

அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார்.

- Advertisement -

விவேக் மறைவு:

அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. மேலும் விவேக் மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த இந்நிலையில் நடிகர் விவேக் குறித்து பலரும் அறியாத சில சுவாரசியமான தகவல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.விவேக்கின் நிஜ பெயர் விவேகானந்தன். இவரை வீட்டில் எல்லோரும் ராஜு என்று தான் செல்லமாக அழைப்பார்கள்.

Vivek

விவேக் குறித்து பலரும் அறிந்திடாத தகவல்:

பொதுவாகவே விவேக் படப்பிடிப்பில் அடுத்த நாளுக்கான வசனங்கள், காட்சிகளை எல்லாம் முதல் நாளே கேட்டு வாங்கி ரியசல் எல்லாம் செய்து பார்த்து தயாராக வந்து விடுவார். அது மட்டும் இல்லாமல் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பதே அவருடைய கொள்கையாகவே வைத்திருந்தார்.

-விளம்பரம்-

உடல் நலத்திலும் அக்கறை உள்ளவர். இதனாலே இவர் காலையில் பல கிலோ மீட்டர் சைக்கிளிங் செல்வர். ஆனால், சென்னையில் கார்,லாரி, பஸ் வெளியிடும் புகையினால் சைக்கிள் ஓட்டுவதை குறைத்து கொண்டார். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை கடைப்பிடித்து வந்தார். அவருடைய அலுவலகத்தில் உள்ள பர்சனல் அறையில் கூட அதை குறித்து பெரிய எழுத்துகளில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டி வைத்திருக்கிறார்.

கமலுடன் இணைந்து படம் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இவருக்கு இருக்கிறது. அந்த ஆசையினால் தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கி சில காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு இருந்தது. இவரின் கடைசி படமாக லெஜண்ட் அமைந்தது.

இவர் ஒரு புத்தக பிரியர். இவருடைய அலுவலகத்தில் மினி லைப்பெரியே வைத்திருக்கிறார். பயணங்களின் போது மறக்காமல் இரண்டு புத்தகங்கள் ஆவது அவர் எடுத்து கொண்டு செல்வாராம். மேலும், நட்பு வட்டாரம் பரிந்துரைக்கும் புத்தகங்களையும் தேடி பிடித்து வாங்கியும் படிப்பார்.இசைஞானியின் தீவிர ரசிகர் மட்டும் இல்லாமல் இசையிலும் அதிக ஈடுபாடு உடையவர். பியானோ நன்கு வாசிக்க கூடியவர்.

வள்ளலார் மீதும் தனிப்பெரும் பற்று கொண்டவர். வள்ளலார் தன் வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து சென்று வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை `வள்ளலார் நெடுஞ்சாலை’ என்று பெயர் வைக்க அனுமதி வாங்கியவர். பசுமை காலம் திட்டத்தின் மூலம் முதன் முதலில் மரக்கன்றுகள் நட ஆரம்பித்தவர். அப்துல் கலாம் 10 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் இவர் மரக்கன்றுகள் நட ஆரம்பித்தார். தற்போது விவேக் விட்டு சென்ற மரம் நடும் பணியை அவருடைய மனைவி அருள் செல்வி தொடங்கி இருக்கிறார். இது குறித்து அவர், என் கணவரிடம் கலாம் ஐயா ஒரு கோடி மரங்கள் நடும் பணியை கொடுத்திருந்தார். அவர் வாழ்நாளில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கிறார். தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்தோடு இணைந்து நான் இப்போது அப்பணியினைத் தொடர்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement