நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விவேக். காரணம் இது தானாம்.

0
10207
vivek
- Advertisement -

நேற்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகர் விவேக் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். இவரின் காமெடியில் நகைச்சுவையும், சமூக சிந்தனையும் இருக்கும். அதனால் தான் இவரை மக்கள் ‘சின்ன கலைவாணர்’ என்று அழைத்து வருகின்றனர்

-விளம்பரம்-

நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : கர்ணனுக்காக ஹோட்டலில் காதை அறுத்த ரவுடி ரசிகர்கள் – தோசைக்காக எழுந்த உரிமை குரலால் நடந்த விபரரீதம். (வீடியோ இதோ)

- Advertisement -

மேலும், அவருக்கு மூச்சு திணறல் இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். நடிகர் விவேக் நேற்று தான் சென்னையில் உள்ள , ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் பத்திரிகையாளர் சந்திப்பதில் கலந்து கொண்டு பேசிய விவேக்,

கொரோனா தடுப்பூசி குறித்து பலவித வதந்திகள் பொதுமக்களிடையே உலா வருகின்றன. கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. ஆனால், பாதுகாப்பு உண்டு. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மருத்துவமனையில் நான் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். இதைச் செலுத்திக்கொண்டால் கரோனா தொற்று வராது என்பதல்ல. வந்தாலும் உயிரிழப்பு இருக்காது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நாம் பாதுகாப்பில்லாமல் இருந்து கொரோனா வந்தால் நாம் தடுப்பூசி மேல் பழியை போடக்கூடாது. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் சமூகப் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் நாம் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

Advertisement