விவேக்கின் டாக்டர் கனவு, 4ஆம் வகுப்பு பிடிக்கும் போதே இந்திரா காந்தியிடம் இருந்து வந்த லெட்டர். விவேக்கின் அம்மா மணியம்மாள்

0
442
Vivek
- Advertisement -

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விவேக்கின் அம்மா கடந்த சில வருடங்களுக்கு முன் அளித்து இருந்த பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பின் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக். பின் நடிகராகவும் சில படங்களில் விவேக் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார். அதிலும் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. இருந்தும் பல லட்ச கணக்கான மரங்களை நட்டு இருக்கிறார். பின் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

விவேக் அம்மா அளித்த பேட்டி:

இன்று மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் முதலாம் நினைவு தினம். இந்நிலையில் ஏற்கனவே விவேக் அம்மா மணியம்மாள் அளித்து இருந்த பேட்டி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, விவேக் உடைய முழு பெயர் விவேகானந்தன். வீட்டில் செல்லமாக ராஜு என்று தான் அழைப்போம். இந்திராகாந்தி பிறந்த நாள் அன்னைக்கு தான் விவேக் பிறந்தான். அவன் பிறந்தவுடனே பெருசாக சாதிப்பான் என்று சொன்னேன். சொன்ன மாதிரியே என் மகனும் செய்தான். விவேக் அப்பாவுக்கு கல்வித்துறையில் வேலை.

இந்திராகாந்திக்கு எழுதிய கடிதம்:

அதனால் அடிக்கடி சட்டிப்பானை தூக்கி கொண்டு ஊர் ஊராக செல்வோம். அப்படி ஒரு முறை குன்னூருக்கு வேலை மாற்றியதால் விவேக் ஊட்டி கான்வென்ட்டில் படித்தான். இங்கிலீஷ் எல்லாம் அப்பவே பிச்சு உதறுவான். ராஜு நாலாவது படிக்கும் போது இங்கிலீஷில் ஒரு லெட்டர் எழுதி எனக்கு ரொம்ப பிடித்த இந்திராகாந்திக்கு அனுப்பினான். அப்போ இந்திரா காந்தி அம்மா தான் பிரதமர். உடனே அவங்க ஒரு பதில் கடிதம் போட்டார்கள். இன்னமும் அந்த லெட்டர் பிரேம் போட்டு பத்திரமாக வீட்டில் மாற்றி வைத்திருக்கிறேன்.

-விளம்பரம்-

விவேக் குடும்பம்:

சிறு வயதில் இருந்தே விவேக் சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் மாதிரி மிமிக்ரி செய்து காட்டுவான். கதைகள் எல்லாம் நிறைய எழுதுவான். விவேக் நடித்த படங்களுக்கு நான் தான் முதல் ரசிகை. நானும் இவனும் அம்மா பையன் மாதிரி இல்லாமல் ஜாலியாக பிரெண்ட்ஸ் மாதிரி இருப்போம். எங்கள் வீட்டில் விவேக் தான் கடைசி. இவனின் மூத்த அக்கா விஜயலட்சுமி டாக்டர் படித்தாங்க. சின்ன அக்கா சாந்தி சட்டம் படித்தார்கள். இவனுக்கும் இயல்பாகவே படிப்பு நல்ல வந்தது. விவேக் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று முதலில் ஆசைப்பட்டான். அப்புறம் என்ன நினைத்தானோ தெரியவில்லை அமெரிக்கன் காலேஜில் பிகாம் படித்தான்.

விவேக் பரதநாட்டியக் கலைஞர்:

காலேஜ் படிக்கும்போதே படிப்பு சரியாக வராத பசங்களுக்கு பொறுமையாக கிளாஸ் எடுப்பான். இவன் காலேஜ் புரபசர் ஆகத்தான் வேலை பார்ப்பான் என்று நினைத்தேன். ஆனால், விவேக் சினிமா நடிகனாக ஆயிட்டான். மேலும், விவேக் ஒரு நல்ல பரதநாட்டியக் கலைஞர் என்பது நிறைய பேருக்கு தெரியாது. சின்ன வயதில் இருந்தே முறைப்படி பரத நாட்டியம் கற்றுக் கொண்டான். நிறைய மேடைகளில் நடனமாடி இருக்கிறான். அதேபோல் விவேக்கிற்கு மியூசிக் மேல் அப்படி ஒரு காதல். அருமையாக பாடுவான். ஆர்மோனியம் ரொம்ப நல்லா வாசிப்பான்.

Actor Vivek Posted About His Mother's Death Fake News

விவேக்கிற்கு கிடைத்த சினிமா வாய்ப்பு:

வயலின், தபேலா என்ற எல்லாத்தையும் அவனுக்கு வாசிக்கத் தெரியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பரதநாட்டியத்தில் முதல் பரிசு வாங்கினவங்களுக்கு சென்னையில் இறுதி போட்டி நடந்தது. அங்குதான் இவனுக்கு முதன்முதலாக கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் பாலச்சந்திரன் உடைய அறிமுகம் கிடைத்தது. இவன் நடனமும் இசையும் பாலசந்தருக்கு ரொம்ப பிடித்து போய் தான் தன்னோட மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். அப்படியே படத்தில் நடிக்க தொடங்கினான் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement