பிரம்மாண்ட வீட்டில் வாழ்ந்து இறந்த விவேக் சிறு வயதில் வாழ்ந்த வீடு இது தான் – அங்கும் வளைர்ந்து நிற்கும் மரங்கள்.

0
696
vivek
- Advertisement -

நடிகர் விவேக்கின் சொந்த ஊர், பூர்வீக வீடு குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

- Advertisement -

விவேக் மரணம்:

பின் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். கடைசியாக இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்து இருந்த அரண்மனை திரைப்படத்தில் விவேக் நடித்து இருந்தார். இந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

vivek

விவேக் கடைசியாக நடித்த படம்:

இந்த படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் விவேக் காமெடி வேற லெவல் என்று சொல்லலாம். அதேபோல் மறைந்த விவேக் அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து LOL எங்க சிரி பார்ப்போம் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒடிடி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருந்தது. சமீபத்தில் தான் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் முதலாம் நினைவு தினம் வந்து இருந்தது.

-விளம்பரம்-

முதலாம் நினைவு தினம்:

இதை ஒட்டி விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும், நடிகருமான செல் முருகன் தொடங்கி இருந்தார். அதேபோல் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து இருக்கிறது.

விவேக்கின் சொந்த ஊர்,வீடு:

இந்த நிலையில் நடிகர் விவேக்கின் சொந்த வீடு குறித்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விவேக்கின் சொந்த ஊர் கோவில்பட்டி. நடிப்பின் மீது இருந்த ஆசையால் சென்னை வந்த விவேக் சென்னையிலேயே செட்டிலாகி விட்டார். ஆனால், விவேக் பிறந்து வளர்ந்த அவருடைய சொந்த வீடு கோவில்பட்டியில் தான் உள்ளது. அந்த வீடு தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement