காமெடியாக இருந்தாலும் இப்படி ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்த விவேக் – ஆர்யா உருக்கம். வீடியோ இதோ.

0
1133
arya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர்யா திகழ்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. சமீபத்தில் இவர் நடித்த சர்பேட்டா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததுடன் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் ஆர்யா. தற்போது ஆர்யா அவர்கள் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த படத்திற்கான பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. இதில் ஆர்யா அவர்கள் விவேக் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது, விவேக் சார் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை பேசுவார். அவர் எவ்வளவு பேசினாலும் இன்னும் என்ன சொல்லுவார் என்ன பேசலாம் என்று நமக்கு தோன்றும். ஒரு முறை என்கிட்ட அவர் படம் பண்ண போறதைப்பற்றி கூட பேசியிருந்தார்.

இதையும் பாருங்க : அட, விஜய்யின் மாஸ்டர் படத்தில் எழிலை நோட் பண்ணிருக்கீங்களா – எந்த காட்சியில் நடித்துள்ளார் பாருங்க.

- Advertisement -

நான் திரில்லர் படம் இயக்க இருக்கிறேன் என்று சொன்னார். நீங்கள் பெரும்பாலும் எடுக்கும் படங்கள் காமெடி படங்கள் தானே என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை இந்த படத்தில் காமெடியே கிடையாது. முழுக்க முழுக்க திரில்லர் தான் என்று சொல்லி அந்த படத்தின் கதையை கூட என்னிடம் சொன்னார். அந்த அளவிற்கு நல்ல மனிதர் என்று கூறினார்.

இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள அரண்மனை திரைப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். படத்தில் விவேக் மற்றும் யோகி பாபுவின் காமெடி வேற லெவல்.

-விளம்பரம்-
Advertisement