விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை பல திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீரியல் குடும்ப இல்லத்தரசிகளின் வாழ்வை மையமாகக் கொண்ட கதை. இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியின் மகனாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்து இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மக்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது.
விஜே விஷால் முதன்முதலில் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டார். அதன் பின் இவர் முதன்முதலாக கல்யாணமாம் கல்யாணம் என்ற சீரியலில் நடித்தார். அதை தொடர்ந்து அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து உள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தளபதி விஜயுடன் படத்தில் நடித்து உள்ளார் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
இதையும் பாருங்க : பிக் பாஸ் Dusky Queen சுருதியா இது ? படு ஓபன் உடையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.
அப்படி எந்த படத்தில் எழில் நடித்தார் என்று பார்த்தால் அது மாஸ்டர் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் மாஸ்டர். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் விஜயுடன் எழில் விஷால் இணைந்து நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. மாஸ்டர் படத்தில் இவர் விஜயுடன் நடித்த சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
எழில் விஜய் தளபதி உடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பது பல பேருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. மேலும், இவர் மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த சில காட்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி எழிலா! என்று ரசிகர்கள் வியப்பில் கேட்டு வருகிறார்கள். மேலும், மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த சிபி தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.