கர்ணன் படத்தை பார்த்துவிட்டு ‘படிக்காதவன்’ ஸ்டைலில் விவேக் போட்ட பதிவு வைரல்.

0
12422
dhanush
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகியுள்ளது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Image

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி ட்வீட் போட்டுள்ள நடிகர் விவேக், எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி தனுஷ் ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக் மற்றும் தனுஷ் இருவருமே பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் முதன் முறையாக 2009 -ல் வெளியான படிக்காதவன் படத்தின் மூலம் ஒன்றாக நடித்தனர். அந்த படத்தில் இவர்கள் காம்போ வெற்றிபெற அதன் பின்னர் உத்தமபுத்திரன், சீடன், மாப்பிள்ளை, வேலையில்லா பட்டதாரி, என்று பல்வேறு படங்களில் இவர்களின்கம்போ தொடர்ந்தது.

-விளம்பரம்-
Advertisement