எனக்கே இந்த படம் எல்லாம் எப்படி ஹிட் ஆச்சுனு தெரில..! விஜய் சொன்ன அசத்தல் பதில்

0
290
Vijay

தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் நடித்த பல்வேறு படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. அதில் ஒரு சில படங்கள் என்றும் மக்கள் மறக்க முடியாத அளவிற்கு ஹிட் அடித்துள்ளது. ஆனால், விஜய்யிடம், அவரை பொறுத்த வரை அவருடைய படங்களில் எந்த படம் மிகப்பெரிய ஹிட் என்ற கேள்விக்கு அவர் கூறியிருந்த பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது.

vijay actor

நடிகர் விஜய் பொறுத்த வரை மிகவும் அமைதியான மனிதர், படபிடிப்பு தளங்களில் கூட யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார் என்று தான் அனைவரும் கூறுவார்கள். ஆனால், உண்மையில் நடிகர் விஜய் மிகவும் நகைச்சுவை உணர்வு உடையவர், அனைவரிடமும் கிண்டலாக பேசுவார் என்பதற்கு ஒரு சின்ன விடயத்தை இங்கே நினைவு கூறுவோம்.

நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் எந்த அளவிற்கு வெற்றியடைந்தது என்பது தெரியும். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் பல்வேறு வெற்றி விழா கொண்டாடும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். அதுபோல நண்பன் படத்தின் ஒரு வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது நடிகர் விஜய்யிடம்,‘நீங்கள் நடித்த படங்களிலேயே இதெல்லாம் எப்படி ஹிட் ஆனது? என்று நினைக்கும் படம் எது?’ என்று கேள்விக்கப்பட்டது.

vijay actor

அதற்கு நடிகர் விஜய், எனக்கே நான் நடிச்சி ஹிட் ஆன படம் எல்லாமே எப்படி ஹிட்டாச்சுனே தெரியலேயே என்று மிகவும் காமெடியாக கூற அரங்கில் அமர்ந்திருந்த அணைத்து ரசிகர்களும் சிரித்துவிட்டனர். இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோவாக இருந்தும் சற்றும் தலைக்கனம் இல்லாமல் விஜய் இப்படி கூறியிருந்தது அனைவரையுமே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.