விவேக், ரகுவரன் முதல் ரோஜா நதியா வரை – ரஜினியுடன் நடித்துவிட்டு கமலுடன் நடிக்காத டாப் நடிகர் நடிகைகள்.

0
535
rajini
- Advertisement -

குழந்தை கதாபாத்திரமாக தோன்றி இன்று உலக சினிமா வரை சென்ற உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் பிக் பாஸ் மூலம் அனைவரின் ஆதரவை பெற்றவர். இப்பொழுது கடைசியாக நடித்த படம் ‘ விக்ரம் ‘ வசூல் சாதனை படைத்து அனைத்து மக்களிடமும் பாராட்டு பெற்றது. இன்னும் மக்கள் எதிர் பார்கும் நிலையில்’ இந்தியன்2 ‘ படம் 2ம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தூடங்கி உள்ளது. இன்னும் தொடக்க நிலையில் ‘ தலைவன் இருக்கிறான் ‘, ‘ பாபநாசம்2 ‘ ஆகிய படங்கள் கிடப்பில் இருக்கிறது.

-விளம்பரம்-

நமது அனைவரின் அன்பிற்குரிய சின்னகலைவானர் விவேக் அவர்கள் 2001ம் ஆண்டு ‘ பார்த்தாலே பரவசம் ‘ படத்தில் கமல் (கெஸ்ட் ரோல் ) நடித்தனர். ஆனால் கமலுடன் இணைந்து நடிக்கவில்லை. 20வருடம் கழித்து கமலுடன் இணைந்து இந்தியன்2 படத்தில் நடித்தார். ஆனால் படப்பிடிப்பு முடியாத நிலையில் கொரோனா காரணமாக விவேக் நம்மைவிட்டு பிரிந்தார்.எனவே படப்பிடிப்பு முடியாத நிலையில் இருப்பதால் படகுழு விவேக் நடித்த பகுதியை படத்தில் இருந்து எடுக முடிவு செய்துள்ளனர்.

- Advertisement -

ஒரு காலத்தில் ஹீரோக்களுக்கு இணையாக வில்லனுக்கு என்று தனி ரசிகர்பட்டலாம் வைத்து இருந்தவர் தான் ரகுவரன். ரகுவரன் கமலுடன் இணைந்து நடிப்பதற்கு ஒரு தயக்கம் காட்டினார். குறிப்பாக சக நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் தன்னைவிட அக்காட்சியில் சிறப்பாக யாரும் தெரியக்கூடாது என்று எடிட்டிங்கில் இருந்து தன் திறமையினால் தூக்கிவிடுவர். அதனாலேயே கமலுடன் இணைத்து நடிப்பதை ரகுவரன் தவிர்த்து வந்தார்.

தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நதியா அவர்கள் .இவர் 80 – 90 காலகட்டங்களில் சிறந்த ஹீரோயினாக ரசிகர்களின் மத்தியில் வளம் வந்தவர். இவர் முத்த காட்சிகள் மற்றும் கிளாமர் காட்சிகளில் நடிக்க விரும்பாதவர்.எனவே 80-90 களில் ஃபேமஸ் ஹீரோயினாக இருந்தாலும் கமலுடன் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

-விளம்பரம்-

90களில் மிக படங்களில் பிஸியாக இருந்த ஆந்திராவை சேர்ந்த நடிகை ரோஜா இவர் தமிழில் செம்பருத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் ஒரு நேர்காணலில் பேசிய பொழுது, கமல்ஹாசனின் படங்களில் கதாநாயகிகளுடன் முத்தக் காட்சிகளைத் தவிர வேறு என்ன இருக்கும் என்று ஒருமுறை கருத்து தெரிவித்தார், அதனால்தான் பன்முகத்தன்மை வாய்ந்த நடிகருடன் பணிபுரியும் வாய்ப்பு தனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்று வருத்தபட்டார்.

நடிகை நக்மா இவரது இயற் பெயர் நந்திதா மொராஜி.இவர் நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகாவின் சகோதரி ஆவார்.இவர் 90 காலகட்டங்களில் நடித்தவர்.இவரது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வுடன் இணைந்து பாட்ஷா படத்தில் நடித்தார்.இவர் மொத்தம் தமிழில் 13 படங்கள் தான் நடித்தார்.எனவே கமல் வுடன் நடிக்க ஆர்வம் இருந்தாலும் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் கமலுடன் இணைந்து நடிக்க முடியவில்லை.

கமல் ரஜினி இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம்:

படங்களில் போட்டி என்னதான் இருந்தாலும் ரஜினி கமல் மிக சிறந்த நண்பர்கள்.அவர்கள் தங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் வைத்து கொண்டனர் என்று சினிமா வட்டாரங்களில் ஒரு செய்தி உள்ளது .ஆதாவது ரஜினி படத்தில் நடிக்கும் முக்கிய கதா பாத்திரங்கள் கமலுடன் நடிக்க மாட்டார்கள்.அது போன்று தான் கமல் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் ரஜினி படத்தில் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இருவர் படத்திலும் நடிக்க நடிகர்கள் உண்டு. இது எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

Advertisement