ராயப்பன் மைக்கேல் காட்சிகளில் மைக்கேலாக டூப் போட்டது இந்த இளம் நடிகர் தானாம். புகைப்படங்கள் இதோ

0
151648
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். பல ஆண்டுகளாக இளையதளபதி என்ற பட்டத்துடன் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வரும் இவரது படங்கள் என்றாலே வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது இறுதியாக இவரது நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தெறி, மெர்சல் போன்ற படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அட்லி மற்றும் விஜய்யின் இந்த கூட்டணி. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருந்தது.

-விளம்பரம்-

இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் நயன்தாரா, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், ஆனந்தராஜ், யோகிபாபு, விவேக், கதிர், இந்துஜா, டேனியல் பாலாஜி என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே நடித்து இருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

- Advertisement -

இருப்பினும் இந்த படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து உள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்திருந்தனர். வெளியான பத்து நாட்களிலேயே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இந்த படம் சாதனை படைத்தது. இதுவரை 300 கோடி வசூல் செய்துள்ளது என்றும் கூறப்பட்டது. என்னதான் இந்த படத்தின் பல காட்சிகள் பல படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று கூறினாலும்.

இந்த படத்தில் ராயப்பன் மற்றும் பிகில் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நின்றது. அதிலும் ராயப்பன் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இந்த படத்தில் ராயப்பன் மற்றும் பிகில் இருவருக்கும் வரும் காட்சிகளில் பிகில் விஜய்க்கு பாடி டபுளாக நடித்தது நடிகர் ஸ்ரீராம் என்பவர் தானாம். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீராம்,.

-விளம்பரம்-
Advertisement