வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை – ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல். இத்தனை லட்சமா ?

0
2854
madhuvanthi
- Advertisement -

வீட்டு கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் பிரபல நடிகரின் மகளின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஒய்.ஜி மகேந்திரன். இவரின் மகள் தான் மதுவந்தி. அடிக்கடி இவரை பற்றி எதாவது ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் வந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது இவரின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ள தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுவந்தி அவர்கள் பாஜகவின் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஆசியான அப்பார்ட்மெண்டில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார்.

-விளம்பரம்-
ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல்;கடனை திருப்பி  செலுத்தவில்லை என புகார்| YGMahendran - YouTube

இவர் இந்த வீடு வாங்குவதற்காக 2016ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். வீட்டை வாங்கிய பிறகு சில தவணைகள் மட்டும் இவர் கட்டி வந்துள்ளார். அதற்குப் பின்னர் எந்த தவணையும் கட்டவில்லை மற்றும் முழு பணமும் திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. பிறகு பல மாதங்களாகவே வட்டி பணம் கட்ட சொல்லி இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் கேட்டுள்ளார்கள். ஆனால், மதுவந்தி பணம் கட்டாமல் இன்று நாளை என்று இழுத்தடித்து வந்துள்ளாராம். இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் வட்டியுடன் அசலையும் சேர்த்து ரூ 1,21,30,867 பணம் கட்ட சொல்லி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதையும் பாருங்க : னுசங்க கொடுக்காத அங்கீகாரத்த ஒரு App கொடுத்துச்சு – டிக் டாக் புகழ் நாதியா சொன்ன சோக கதை.

- Advertisement -

மேலும், பைனான்ஸ் நிறுவனம் அனுப்பிய நோட்டீஸ்க்கு மதுவந்தி எந்த ஒரு பதிலும் கூறவில்லை. இந்த நிலையில் இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குப் போட்டிருந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தி செலுத்த வேண்டிய தொகைக்கு அவரின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்போடு மதுவந்தின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டு வீட்டு சாவியை இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுவந்தி வீட்டுக்கு சீல்.. பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1 கோடி வாங்கி திரும்ப  செலுத்தவில்லை என புகார் | BJP supporter Madhuvanthi didnt repay due  officers sealed her Chennai ...

இந்த விவகாரம் தொடர்பாக மதுவந்தி இடம் கேட்டபோது அவர் கூறியது, தனது வீட்டை அதிகாரிகள் சீல் வைக்க வில்லை. இது தவறான தகவல். மேலும், இது குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இவர் தனியார் பள்ளியில் சீட்டு வாங்கி தருவதாக ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் மதுவந்தி சிக்கி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கி திருப்பி கட்டாததால் மதுவந்தி வீட்டுக்கு சீல் வைத்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement