நடிகர் யோகி பாபுவின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறிந்திடாத விஷயம்.

0
10371
Yogi-Babu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடியில் மன்னாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் யோகி பாபு. இவரின் கால்சீட் கிடைக்காதா என்று பல இயக்குனர்கள் ஏங்குகின்றனர். தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பிறகு காமெடி நடிகர்களில் அதிக புகழையும், பிரபலத்தையும் குறுகிய காலத்திலேயே சம்பாதித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு. 2009 ஆம் ஆண்டு தான் நடிகர் யோகிபாபு அவர்கள் சினிமா உலகிற்கு முதன் முதலாக காலடி எடுத்து வைத்தார்.

-விளம்பரம்-

ஆனால், இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த யாமிருக்க பயமேன் என்ற திரைப்படத்தில் “பன்னி மூஞ்சி வாயா” என்ற டயலாக் மூலம் தான் மக்களிடையே பிரபலமானார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

- Advertisement -

மேலும், இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார். இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் யோகி பாபுவின் அப்பா குறித்த தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

yogi-babu

நடிகர் யோகி பாபுவின் அப்பா ஒரு ராணுவ வீரர். இவர் அப்பா 24 ஆண்டுகள் ராணுவத் துறையில் பணி ஆற்றி உள்ளார். தன் அப்பாவைப் போலவே தானும் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்று யோகி பாபு ஆசைப்பட்டு உள்ளார். அதனால் பெங்களூரில் ராணுவ கார்டன் பாய் ஆக சில காலம் யோகி பாபு வேலை பார்த்துள்ளார்.

-விளம்பரம்-

அப்பாவின் இறப்பிற்குப் பிறகு இவர் சினிமா நோக்கி பயணம் செய்தார். தன்னுடைய கடின உழைப்பால் இன்று முன்னணி காமெடி நடிகராக உள்ளார். சமீபத்தில் தான் நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கூடிய விரைவில் அனைத்து பிரபலங்களையும் அழைத்து திருமண வரவேற்பு விழா நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement