ஒட்டுமொத்த உலகத்தையும் இந்த கொரோனா வைரஸ் படாதபாடு படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். கொரோனா வைரஸினால் நாடே பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதில் அதிகமாக ஏழை மக்கள் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதிலிருந்து நிரந்தரமாக விடுதலை எப்போ கிடைக்கும் என்றே தெரியவில்லை. உலக நாடுகள் அனைத்தும் இதனை எதிர்த்து போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை 1684 பேர் பாதிக்கப்பட்டும், 38 பேர் உயிர் இழந்தும் உள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் பாருங்க : இறுதியாக மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஆல்யா. இந்த பெயரை தான் வைத்துள்ளார்களாம்.
இந்திய அரசாங்கம், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என பல பேர் தங்களுடைய குடும்பங்களை மறந்தும், உயிரை பணய வைத்தும் இந்த கொரோனா வைரஸை எதிர்த்து வைத்தும் வருகின்றனர். இவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் யோகிபாபு அவர்கள் போலீசிற்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது, வீட்டின் அருகில் போலீஸ்காரர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தார் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள். பெண் காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள்.
அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவி. மக்களுக்காகப் பணி செய்யும் காவலர்களுக்கு பொதுமக்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்று நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் யோகி பாபுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட யோகி பாபு ரசிகர்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு செய்து உள்ளார்கள். கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் தன்னலம் இல்லாமல்,நேரம் காலம் பார்க்காமல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறை ஈடுபட்டு வருகின்றது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைக்கு மாஸ்க் வாங்கி கொடுத்து தங்களால் இயன்ற சமூக சேவையை செய்து உள்ளார்கள்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எல்லாம் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுரை படுத்தி வருகிறார்கள். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரபலங்களும் தங்களால் முடிந்த பண உதவிகளையும் செய்து வருகின்றனர்.