இறுதியாக மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட ஆல்யா. இந்த பெயரை தான் வைத்துள்ளார்களாம்.

0
43962
alya
- Advertisement -

தமிழ் சினிமா திரைப்படங்களுக்கு நிகராக தற்போது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமா துறையில் உள்ள நடிகர், நடிகைகளின் புகழுக்கு நிகராக சீரியல் நடிகர்களும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ளனர். சமீப காலமாக மக்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களை பார்ப்பதில் தான் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அதிலேயேயும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள், பல குடும்பங்களின் மனதில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-
View this post on Instagram

Kutty Papu ? I request everyone to be at home safe ?

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

ராஜா ராணி சீரியலில் சின்னையாவாக சஞ்சீவும்; செம்பாவாக ஆலியா மானசாவும் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு தான் இவர்களுக்கு பகிரங்கமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. விஜய் டிவியிலும் இதுகுறித்து அதிகமாக பேசப்பட்டு வந்தார்கள்.

இதையும் பாருங்க : அஜித் இதுவரை நடித்த 4 விளம்பரங்களை பார்த்துள்ளீர்களா? ஒரே வீடியோவில் இதோ.

- Advertisement -

ஆனால், இவர்கள் திருமணம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது. அதற்கு காரணம் ஆலியா மானசா வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய திருமணம் ரகசியமாக முடிவடைந்தாலும் திருமண வரவேற்பு விழா பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் நண்பர்களும், உறவினர்களும், திரைஉலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடினார்கள். பின் ஆலியா மானசா திருமணத்திற்குப் பிறகும் நடிக்க வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஆலியா மானசா கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆல்யா மானஸாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் பாருங்க : தனுஷ் தவறவிட்ட ‘திருடன் போலீஸ்’ பட இயக்குனருடன் தனுஷ். வைரலாகும் அரிய புகைப்படம்.

-விளம்பரம்-

இதனை ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தன் குழந்தைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி அந்த புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் ஆல்யா. இந்த நிலையில் ஆல்யா மானஸா முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தங்களது மகளுக்கு அய்லா சையத் என்று பெயர் வைத்துள்ளார்கள். அதாவது ஆல்யா என்ற பெயரில் இருந்தும் சஞ்சீவ்வின் உண்மையான பெயர் “syed Azharuddin Buhari”  என்ற பெயரில் இருந்தும் எடுத்து இந்த பெயரை வைத்துள்ளார்கள்.

Advertisement