‘இவர்கிட்ட இருந்து கத்துக்கோங்க’, தூய்மை பணியாளர்களிடம் யோகி பாபு நடந்துகொண்ட விதம்- ரோஜாவை வம்பிலுக்கும் ரசிகர்கள்

0
290
- Advertisement -

திருச்செந்தூர் முருகர் கோவிலில் தூய்மை பணியாளர்களிடம் நடிகர் யோகி பாபு நடந்திருக்கும் விதம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில். இந்தக் கோவில் உலக அளவில் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மக்களின் கூட்டமும் அலைமோதிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிரபல நடிகையும், அமைச்சருமான ரோஜா அவர்கள் தன்னுடைய கணவருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அப்போது நடிகை ரோஜாவை சுற்றி செல்ஃபி எடுத்து இருந்தார்கள். அனைவரிடமும் நடிகை ரோஜா செல்பியும் எடுத்திருந்தார். அதன் பின் தூய்மை பணியாளர்கள் சிலர் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு ரோஜா அருகில் சென்றிருந்தார்கள். உடனே ரோஜா கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று கையில் சைகை செய்தார். இதனால் அவர்களும் சற்று தள்ளிய படியே ரோஜாவுடன் நின்று புகைப்படம் எடுத்தார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி இருந்தது.

- Advertisement -

ரோஜாவை திட்டிய நெட்டிசன்கள்:

இதை பார்த்த பலரும் ரோஜாவின் செயலை திட்டியும் கண்டனம் தெரிவித்தும் இருந்தார்கள். மேலும், தூய்மைப் பணியாளர்கள் என்ன தீண்டத்தகாதவர்களாக? ஏன் இப்படி செய்திருக்கிறீர்கள்? ஒரு அமைச்சராக இருந்து நீங்கள் இப்படி எல்லாம் செய்யலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் முருகர் கோவிலில் யோகி பாபுவின் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

யோகிபாபு செய்த செயல்:

அதாவது, நடிகர் யோகி பாபு அவர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தன்னுடைய குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருக்கிறார். அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்து முடித்து ரசிகர்கள் உடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது அங்கு வேலை செய்யும் தூய்மை பணியாளர்களும் யோகி பாபுவுடன் செல்ஃபி எடுக்க கேட்டிருக்கிறார்கள். உடனே அவர் பக்கத்தில் அழைத்து சிரித்தபடியே போஸ் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கண்டனம்:

அவ்வளவு பேர் புகைப்படம் எடுக்க கேட்டும் முகம் சுளிக்காமல் யோகி பாபு போட்டோ எடுக்க நின்று இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள், யோகி பாபுவிடம் இதை கற்றுக் கொள்ளுங்கள். மனிதநேயம் வேண்டும் என்றெல்லாம் ரோஜாவை வம்பிழுத்து மீண்டும் திட்டி வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் யோகி பாபு.

யோகிபாபு திரைப்பயணம்:

தற்போது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்கள் பட்டியலில் யோகி பாபு பெயர் தான் முதலிடத்தில் இருக்கும்.
இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீப காலமாக இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ படம் பல விருதுகளை பெற்று இருந்தது. தற்போது இவர் ‘போட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

Advertisement