தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.
இந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம் யோகி பாபு.நடிகர் யோகி பாபுவிற்கு திருமணம் எப்போ?எப்போ? என்று பல கேள்விகள் சோசியல் மீடியாவில் வந்து இருந்தது. தற்போது ஒரு வழியாக நடிகர் யோகி பாபு அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்து முடிந்தது. இவர் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்கிற பெண்ணை கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் திருமணம் செய்து கொண்டார்.
யோகி பாபு அவர்களுடைய குலதெய்வ கோவிலில் மிகவும் சிம்பிளாக தன்னுடைய திருமணத்தை செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.நெருங்கிய உறவினர் மற்றும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.திருமணத்தை எளிமையாக முடித்தாலும் யோகிபாபு பல்வேறு பிரபலங்களை அழைத்து ரிசப்ஷன் வைக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பிரச்சினை காரணமாக அதுவும் நடக்கவில்லை.
இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யோகி பாபுவின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே இரு மாநில எல்லையில் அமைந்துள்ள ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் நடிகர் யோகிபாபு. தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.