நடிகர்கள் மூலம் வரும் கொலை மிரட்டல் , இது கமல் போட்ட விதை- தயாரிப்பாளர் கொடுத்த ஷாக்.

0
421
kamal
- Advertisement -

கொலை மிரட்டலுக்கு நடிகர்களே காரணம், கமலில் தொடங்கியது தான் இது என்று தயாரிப்பாளர் கே ராஜன் அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிகப்பிரபலமான தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் கே ராஜன். இவர் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்கள் கொண்டவர். மேலும், இவர் எப்போதும் திரை உலகை விமர்சிப்பதும், நடிகர் நடிகைகளை குறித்து கடுமையாக பேசுவதும் போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-
K Rajan

அந்த வகையில் தற்போது இவர் கமல் குறித்து பேசி இருப்பது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜ்மோகன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்கிய ராஜ்மோகன் தற்போது அட்ரஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதர்வா, இசக்கி பரத், தம்பி ராமையா, ஸ்டண்ட் சிவா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

அட்ரஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா:

இப்படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அட்ரஸ் படத்தின் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். மேலும், சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கே ராஜன் கலந்து கொண்டார். பிறகு விழாவில் கலந்து கொண்ட கே ராஜன் அவர்கள் கூறியிருப்பது, தயாரிப்பாளர்களின் நிலை தற்போது மோசமாக உள்ளது. 5 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இறுதி நேரத்தில் ஐந்து லட்சம் ரூபாய் தயார் செய்வது கடினமாக உள்ளது.

தயாரிப்பாளர் நிலை குறித்து கே.ராஜன் கூறியது:

ஏன்னா, நடிகர்கள் டப்பிங் பேசுவதற்கு முன்பு முழு சம்பளத்தையும் கொடுக்கவில்லை என்றால் டப்பிங் பேச மறுக்கின்றனர். இதனால் தயாரிப்பாளர் வேற வழியில்லாமல் நடிகர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கிறாங்க. அதிலும் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால் போதும் அடுத்த படத்திலேயே தங்களின் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். இப்படி இருந்தால், தயாரிப்பாளர் எந்த அளவிற்கு தான் கடன் வாங்குவது. எந்த சொத்தை விற்று தொகையை தயார் செய்வது? சமீபத்தில் வெளியான திரைப்படம் தோல்வியடைந்த நிலையிலும் அந்தப் படத்தின் நடிகர் தன்னுடைய சம்பளத்தை 40 கோடி ரூபாய் உயர்த்தி விட்டார்.

-விளம்பரம்-

கமல் ரசிகர்கள் விடுத்த கொலை மிரட்டல்:

சினிமாவில் முதலீடு செய்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும். சம்பளம் பெறுபவர்களும் நன்றாக இருக்க வேண்டும். அப்போது தான் சினிமா வளர்ச்சி அடையும். இதை புரிந்து கொண்டாலே போதும். அதிலும் சமீப காலமாக சில நடிகர்களின் ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதை அந்த நடிகர்கள் தான் தூண்டிவிடுகின்றனர் என்பது எனக்கு தெரியும். முன்பொரு காலத்தில் நடிகர் கமலஹாசன் தனது ரசிகர்களை தூண்டிவிட்டு என்னை மிரட்டினார். அந்த ரசிகர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்ட்டார்கள்.

Producer K Rajan Slams Kamal And Recalls What He Did To Him

வைரலாகும் கே.ராஜன் பேட்டி:

ஆனால், கைது செய்யப்பட்ட மூன்று ரசிகர்களையும் கமல் கண்டுகொள்ளவில்லை. இதனால் நானே புகாரை வாபஸ் பெற்று ஜாமீனில் எடுத்தேன். தற்போதும் இதேபோல் சில நடிகர்களின் ரசிகர்கள் மிரட்டல் விடுக்கின்றனர் என்று கூறி இருக்கிறார்கள். இப்படி கே.ராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கவல் சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து எந்த நடிகர்? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement