ஆண்ட்ரியா சொன்ன ஒரு வார்த்தை ! கோபத்தில் விஜய் ரசிகர்கள் ! குஷியில் தல ரசிகர்கள்

0
1037
Actress Andriya

சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை ஆண்ட்ரியா.தமிழில் வெளியான பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஆண்ட்ரியா ஒரு பின்னணி பாடகரும் கூட இவர் கோவா,ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார் .விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் கூட விஜயுடன் சேர்ந்து கூகுல் கூகுல் என்ற பாடலை பாடியுள்ளார்.

vijay_ajith

மேலும் இவர் தல அல்டிமேட் ஸ்டார் அஜித்துடனும் மங்காத்தா படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்திருப்பார்.தற்போது விஸ்வரூபம் 2,வடச்சென்னை போன்ற படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றிருந்தார், அப்போது உங்களுக்கு விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா? என்ற கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா சற்றும் யோசிக்காமல் எனக்கு தல தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆண்ட்ரியா மீது சற்று காட்டமாக உள்ளனர்.

நடிகை ஆண்ட்ரியா ஏற்கனவே ஒரு நேர்காணலில் அஜித்துடன் நான் மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தான் நடித்தேன், ஆனால் அப்போது என்னை அவர் வரவேற்ற விதம் ,எனக்கு மரியாதை தந்த விதம் என்று அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது.அதனால் எனக்கு எப்பவுமே அஜித் தான் பிடிக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.