கேவலமாக பேசிய பிரபல தொகுப்பாளருக்கு தக்க பதிலடி கொடுத்த ராகுல் ப்ரீத் சிங் !

0
954

சில மாதங்களுக்கு முன்பு பிரபல சன் மியூசிக் பெண் தொகுப்பாலினிகள் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அதையும் தாண்டி தெலுங்கு சினிமா நடிகைகளை ஒரு டீவி தொகுப்பாளர் அசிங்கமாக பேசியதை ராகுல் ப்ரீத் சிங் கண்டித்துள்ளார்.

poosani krishana

டீவி5 என்னும் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 3 நாட்களுக்கு முன்னர் பிரபல தெலுங்கு நடிகர் பூசணி கிருஷ்ணா பங்குபெற்றார்.அப்போது அவர் அந்திராவிற்கு சிறப்பு பிரிவு அங்கீகரம் அளிப்பதற்கு தெலுகு சினிமாவில் நிறைய பேர் ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார்.அப்போது எதிரில் அமர்ந்திருந்த தொகுப்பாளர் சாம்பா சிவா ராவ் தெலுங்கு சினிமா ஒரு வேசிகள் நிறைந்த துறை என்று படு மோசமான வார்த்தையை பயன்படுத்தினர். இதனால் அவரின் அநாகரீக பேச்சை கண்டித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்டுள்ளது

மேலும் தீரன் படத்தில் நடித்த ராகுல் ப்ரீத் சிங் சாம்பா சிவா தன்னை தொகுப்பாளர் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வேண்டும்,நடிகைகளை இப்படியா அனாகரீகமாக பேசுவது என்று அவரின் பேச்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.