அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை ரம்யா ! புகைப்படம் உள்ளே !

0
3611
Ramya
- Advertisement -

கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அவர் தற்போது என்ன செய்து வருகிறார் என்பதை பார்ப்போம்?

Actress-Ramya

- Advertisement -

அவருடைய பெயர் திவ்யா ஸ்பந்தனா. இவர் கர்நாடக மாவட்டம் பெங்களூரில் கடந்த 1982ஆம் ஆண்டு பிறந்தவர். இவருடைய குடும்பம் ஒரு காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பம் ஆகும். அம்மா ரஞ்சிதா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய தாத்தா எஸ்.எம் கிருஷ்ணா இந்தியாவின் ஒரு மூத்த அரசியல் தலைவர் மற்றும் ஆளுநராக பணியாற்றியவர் ஆவார்.

திவ்யாவிற்கு குத்து ரம்யா என்ற பெயரும் உள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். இதனால் இவருக்கு குத்து ரம்யா என்ற பெயர் வந்தது.

Actressramya

பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த குத்து ரம்யா, தமிழில் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், ஆகிய ஹிட் படங்களில் நடித்தார். தற்போது தீவிர அரசியலில் இருக்கும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவராக இருக்கும் திவ்யா, மாண்டியா பாராளுமன்ற தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதிய ஜனதா கட்சியை மிக நூதனமாகவும் மக்களுக்கு எளிதில் சென்று சேரும் வகையில் விமர்சனம் செய்கிறார்.

Ramya

இதனால், காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதல தலைவராக இவர் நியமிக்கப்பட உள்ளார். இதனை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். தற்போது கன்னடத்தில் ‘தில் க ராஜா’ என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரம்யா.