நதியா முதல் ஷாலினி வரை – கிளாமர் காட்டாமல் ஜெயித்து காட்டிய 6 நடிகைகள். யார் யார் தெரியுமா ?

0
297
Shalini
- Advertisement -

சினிமா உலகில் கவர்ச்சி காட்டாமல் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த நடிகைகள் குறித்த பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் என்றால் அழகு, கவர்ச்சி என்று தான் சொல்வார்கள். படத்தின் கதைக்கேற்ற மாதிரி கதாநாயகிகள் நடிப்பதாக இருந்தாலும் அடிக்கடி கவர்ச்சியும் காட்டி நடிக்கிறார்கள். அதனால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடிக்கலாம் என்று நம்புகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் சமீப காலமாகவே கதாநாயகிகள் மட்டுமில்லாமல் துணை நடிகைகளும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்து வருகிறார்கள். ஆனால், சினிமாவில் திறமையால் ஜெயிக்க முடியும் என்பதை சில நடிகைகள் நிரூபித்து இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சினிமா கேரியரில் கவர்ச்சி காட்டாமல் தங்களுடைய திறமை மூலம் நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளின் பட்டியலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

- Advertisement -

ரேவதி:

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக நடித்தவர் ரேவதி. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மண்வாசனை என்ற படத்தின் மூலம் தான் இவர் ஹீரோயினியாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் இடத்தைப் பிடித்து விட்டார். அதற்கு பிறகு இவர் நடிப்பில் வெளி வந்திருந்த புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தால், கன்னி ராசி, ஆண் பாவம், புன்னகை மன்னன், கிழக்கு வாசல், தேவர் மகன் போன்ற பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போதும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிரட்டிக்கொண்டு வருகிறார். இவர் தன்னுடைய சினிமா வாழ்நாளில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் தன்னுடைய திறமையின் மூலம் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

சுகாசினி:

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுகாசினி. இவர் தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் இயக்குனர் மணிரத்தினனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இவரும் எந்த காரணத்தைக் கொண்டும் படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்து ஜெயித்து காட்டியிருக்கிறார்.

-விளம்பரம்-

சித்தாரா:

தென்னிந்திய சினிமாவுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சித்தாரா. இவர் புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர் படங்களில் கவர்ச்சி காட்டாமல் கதைக்கு என்ன தேவையோ அதற்கேற்றவாறு நடித்து குடும்ப பெண்ணாக அனைவரும் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

ஊர்வசி:

சினிமாவில் முன்னணி நடிகைகளாலும் காமெடி செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் ஊர்வசி.
இவர் பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமாக இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் கிட்டத்தட்ட 704 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழி படங்களில் நடித்து வருகிறார். படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற ஒரு கட்டுக்கோப்புடன் இருக்கும் நடிகைகளின் இவரும் ஒருவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.

ஷாலினி

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி பின் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார். அஜித் உடன் அமர்க்களம் என்ற படத்தில் இணைந்து ஷாலினி நடித்திருந்தார். அப்போதே அஜித்திற்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். இவரும் எந்த படங்களிலும் கவர்ச்சி காட்டாமல் நடித்தவர்.

நதியா:

தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியிருப்பவர் நதியா. இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். தற்போதும் இவர் இளமை குறையாமல் ஹீரோயினியாகவே இருக்கிறார். இவரும் எந்த காரணத்தை கொண்டும் படங்களில் கவர்ச்சி காட்டாமல் நடித்தவர்

Advertisement