நடிகையின் ஆடையை அவிழ்த்த மர்ம நபர்கள் ! வயதானவர் சொன்ன சொல் ! கவலையில் நடிகை

0
1762

நடிகைகள் எங்கு சென்றாலும் அவர்களை துரத்தி பிடித்து செல்பி எடுப்பது. அவர்கள் அருகில் சென்று அவர்களிடம் ஆட்டோகிராப் கேட்டு தொந்தரவு செய்வது போன்ற காரணங்களாலே பெரும்பாலும் சினிமா நடிகைகள் பொது இடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் இன்டோரை சேர்ந்த நடிகை ஒருவர் மர்ம நபர்கள் செய்த தொந்தரவால் பைக்கில் இருந்து விழுந்து காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Aakarshi Sharma

டெல்லி மாடல் அழகியும் நடிகையுமான ஆகர்ஷி ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி ஒன்றில் இன்று விடியர்காலை தனது ஸ்கூடியில் சென்று கொண்டு இருந்த போது யாரென்றே தெரியாத இரண்டு மர்ம நபர்கள் நான் அணிந்த பாவாடையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசினார்கள். இதனால் கோபமடைந்த நான் அவர்களை துரத்தியபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டேன் . இதனால் எனக்கு கால்களில் சில காயமும் ஏற்பட்டுள்ளது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றாரால் நான் கீழே விழுந்ததை பார்த்த ஒரு முதியவர் என்னிடம் வந்து , நீ இது போன்ற ஆடையை அணிந்து வந்ததால் இப்படி அவர்கள் செய்ததற்கு காரணம் என்று கூறியது தான் எனக்கு மேலும் கோபத்தை தூண்டியது. அப்போது இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கிடையாதா? இத்தனைக்கும் நான் கூட்ட நெரிசல் மிகுந்த சாலையில் தான் சென்று கொண்டிருந்தேன் ஒரு வேலை நான் ஆட்கள் இல்லாத சாலையில் சென்றிருந்தால் அந்த மர்ம நபர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று தம்மால் எண்ணிப்பார்க்க கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தான் காயமடைந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆகர்ஷி ஷர்மா இந்த வடுக்கள் ஆறிவிடும் ஆனால் என் மனத்தில் ஏற்பட்ட காயங்கள் கண்டிப்பாக ஆறாது என்று அந்த புகைப்படத்திற்கு மேல் பதிவிட்டுள்ளார்.