நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மிக அழகான முகம் தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேசாத, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியினாலும் சினிமா உலகில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். அதுமட்டும் இல்லாமல் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். மேலும், இவரால் சரியாக வாய் பேச முடியாது என்பதே நாடோடிகள் படம் வெளியான பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது.

Advertisement

அந்த அளவிற்கு சற்றும் தன்மை இல்லாமல் நாடோடிகள் படத்தில் நடித்திருந்தார் அபிநயா. அதற்கு பிறகு தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வந்தார். சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ‘ஸ்டாலின்’ தெலுங்கு திரைப் படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்தவர் அபிநயாவின் தந்தை. மேலும்,அந்த படத்தின் போது தான் ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் அபிநயாவை பார்த்தார். அதன் பின் ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் இயக்குனர் சசிகுமாரிடம் அபிநயாவை அறிமுகப்படுத்தினார்.

இதையும் பாருங்க : ஒரே படத்தில் 4 நவீன கதை, ‘சில்லுக்கருப்பட்டி’ 4 கதையின் முழு நீள விமர்சனம். இந்த படத்த மிஸ் பண்ணிடாதீங்க.

அபிநயா அவர்கள் ‘சம்போ சிவ சம்போ’ என்ற படத்திலும் நடித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து ‘ஹுத்துகாரு’ திரைப்படத்திலும் இவரே நடித்தார். இறுதியாக 2017 ஆம் ஆண்டு வெளியான ‘விழித்திரு ‘ படத்திற்கு பின் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. தற்போது இவர் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு சைகை மொழியை கற்றுத் தரும் அவசியத்தை குறித்து பல்வேறு பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பேசியுள்ள அபிநயா, இந்தியாவில் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 5 கோடி பேருக்கு மேல் இருக்கிறார்கள் அவர்களில் பெரும்பாலோனோருக்கு சைகை மொழி தெரியாது ஆகையால் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார் எனது பெற்றோர்கள் எனக்கு வீட்டிலேயே சைகை மொழியை கற்றுக் கொடுத்தார்கள் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு அதை தங்களது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் அதற்காக தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வண்டிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

என்னை பார்த்து என்னுடன் இருக்கும் சில நண்பர்களும் சைகை மொழியை கற்றுக் கொண்டு என்னிடம் சந்தோஷமாக பேசுகிறார்கள். என்னைப் போன்ற மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடி சந்தோஷப்படுகிறேன். மேலும், மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ள பள்ளிகளில் சைகை மொழியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பள்ளிக்கே நேரில் சென்று வலியுறுத்தி வருகிறேன் .தமிழ்நாடு, ஆந்திரா. தெலுங்கானா போன்ற பல்வேறு பள்ளிக் கூடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார் அபிநயா.

Advertisement