ஒரே படத்தில் 4 நவீன கதை, ‘சில்லுக்கருப்பட்டி’ 4 கதையின் முழு நீள விமர்சனம். இந்த படத்த மிஸ் பண்ணிடாதீங்க.

0
2223
sillukkarupatti
- Advertisement -

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சில்லுக்கருப்பட்டி’ . இந்த படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். டிவைன் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது. ஆனால், இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது. 4 மாறுபட்ட காதல் கதைகள் கொண்ட படம். ஆனால், நான்கிலும் ஒரே மையப் பொருள் தான். அந்த காதல் கதை வயதுக்கு தகுந்தாற் போல் இயக்குனர் ஹலீதா ஷமீம் உருவாக்கி உள்ளார். மேலும், இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர்கள் ஒளிப்பதிவு செய்து உள்ளனர். பிரதீப் குமார் இந்த படத்துக்கு இசையமைத்து உள்ளார். வாங்க கதையை பார்ப்போம்…

-விளம்பரம்-
Image result for sillukarupatti cover photo

- Advertisement -

கதைக்களம்:

நான்கு வெவ்வேறு கதைகளை குறும் படமாக அழகாக எடுத்துக் காட்டி உள்ளார் இயக்குனர் ஹலீதா ஷமீம். ஒவ்வொரு படமும் ஒரு அழகிய காதல் காவியம் போன்று அழகாக உள்ளது.

இதையும் பாருங்க : ரஜினி பேரன்களுக்கு 21 வயதில் இத்தனை கோடி வருமாம். சேப்டி படுத்தியுள்ள சூப்பர் ஸ்டார்.

-விளம்பரம்-

முதல் கதை குப்பை(நீல நிற பை) கதை:

ராகுல் என்ற சிறு பையன் குப்பத்தை சேர்ந்தவன். குப்பம் பகுதியை சுற்றி மலைகள் அளவில் குப்பைகள் குவிந்து கிடக்கும். அந்த குப்பை மேட்டில் குப்பைகளை பொருக்குவது தான் அவனுடைய தினசரி வேலை. தன் நண்பர்களுடன் சேர்ந்து குப்பைகளை பெருக்குவான். அதில் இருந்து ஏதாவது கிடைக்குமா? என்று பார்ப்பது தான் அவனுடைய பொழுது போக்கு. தினமும் குப்பையில் இருந்து கிடைக்கும் பொருளை நீல நிற பை ஒன்றில் போட்டுக் கொள்வான். அதிலிருந்து ஒரு சில பொருட்கள் அவனுடைய பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் எழுகின்றன. இவன் இப்படி தன்னுடைய தேடலைத் தொடங்கி இருக்கும் போது அவன் மீது ஒரு பெண் அன்பு செலுத்துகிறார். இதனால் அவனுடைய வாழ்க்கையில் என்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது? எதற்காக அவன் தினமும் இந்த வேலையைச் செய்கிறான்? அவனுடைய வேலை தான் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த முதல் முதல் கதையை ப்ளூபேக் படம் என்று சொல்லலாம்.

Image result for sillukarupatti

இரண்டாவது கதை மணிகண்டன்– நிவேதிதா உடைய காதல் கதை:

இளம் வயதினரிடையே இருக்கும் பிரச்சனைகளும் காதல்களும் பற்றி தான் இந்த இரண்டாம் கதையில் சொல்லி இருக்கிறார். மணிகண்டனுக்கு வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், திருமணம் நாட்கள் நெருங்குவதற்கு முன் அவருக்கு உடலில் ஒரு வியாதி ஏற்படுகிறது. பின் அவனுடைய வியாதி சில நாட்களில் கேன்சராக மாறி விடுகிறது. இதனால் அவனுடைய திருமணமும் நின்று போகிறது. தன் வாழ்க்கையை போனது என்று சோக கடலிலேயே இருக்கும் அவனுக்கு பேஷன் டிசைனர் நிவேதிதாவின் நட்பு கிடைக்கிறது. அவளுடைய அன்பு அரவணைப்பு அவனுக்கு அழகாக மாறுகிறது. அவர்களுடைய அன்பு காதலாக மாறுகிறது. பின் அவர்கள் சேர்ந்தார்களா? இல்லை? இவருடைய வியாதியை தெரிந்த நிவேதிதா மணிகண்டனை ஏற்கிறாரா? விலக்கினாரா? என்பது தான் மீதி கதை.

Image result for sillukarupatti nivethitha

மூன்றாவது முதியவர்களின் காதல் கதை:

இதில் முதியவர் வயதில் இருக்கும் கிராவ்மகா ஸ்ரீராமும், லீலா சாம்சனும் இவர்கள் இருவரும் நட்பாக பழகுகிறார்கள். வயது ஆனாலும் தனக்கு ஒரு தோழமை தேவை என்பதை இந்த படம் அழகாக காண்பித்துள்ளது. சில நாட்களாக நட்பாக பழகிய ஸ்ரீராம் தன்னுடைய காதலை லீலா சாம்சன் இடம் சொல்கிறார். இந்த வயதுப் பருவத்தில் அவர் ஸ்ரீராமின் காதலை ஏற்றுக் கொள்வாரா? இல்லையா? என்பது தான் முதியவர் காதல் கதையின் மீதி கதை. இது அப்படியே ப. பாண்டி படத்தை மீண்டும் பார்த்தது போல உள்ளது என்று சொல்லலாம்.

இதையும் பாருங்க : நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரேகாவின் கணவர் தற்கொலை. கணவர் மனைவி பிரச்சனை காரணமா?

நான்காவது கதை அம்மு கதை:

இந்த கதையில் தான் நம்ம நடிகர் சமுத்திரக்கனியும், நடிகை சுனைனாவும் வருகிறார்கள். நடிகர் சமுத்திரகனியும், சுனைனாவும் கணவன்-மனைவி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள். இவர்கள் நடுத்தர வர்க்கத்தின் குடும்பத்தை சார்ந்தவர்கள். இயந்திரமாக வேலை வேலை என்று இருக்கும் கணவராக சமுத்திரகனி இருக்குறார். இதனால் சுனைனா அவர்கள் தன்னுடைய முன்னாள் காதலனை சந்திக்கிறார். பின் அந்த முன்னாள் காதலன் அவருக்கு உதவி செய்கிறாரா? சமுத்திரகனி ஏன் இப்படி மாறினார்?சுனைனாவும், சமுத்திரகனியும் பழையபடி ஒன்று சேர்ந்து வாழ்கிறார்களா? என்பது தான் இந்த அம்முவின் மீதி கதை.

Image result for sillukarupatti

இந்த படம் முழுக்க முழுக்க அன்பு, பாசம், காதல் என அனைத்தையும் அனைத்து வயதினருக்கும் தேவை என்பதை மிக சுவாரசியமாக கூறி உள்ளது. காதலில் தேவைப்படும் நட்பு, இளம் வயதில் காதலில் உண்டாகும் தாய்மை, நடுத்தர வயதில் தேவையான அரவணைப்பு, முதுமை வயதிலும் காதல் அவசியம் என அனைத்தையும் அழகாக குட்டிக் குட்டி கதைகளாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். இதே மாதிரி சிம்புவின் வானம் படமும் இது போல் தான் சின்ன சின்ன கதைகளாக துண்ணிக்கப்பட்டு இருந்தது.

பிளஸ்:

குறும்படமாக இருந்தாலும் அனைத்து வயதினரும் தேவைகளை மிக அழகாக காண்பித்துள்ளார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவு அட்ராசிட்டி.

அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.

மைனஸ்:

படம் முழுவதும் குட்டி குட்டி கதையாக இருப்பதால் எங்கேயோ போவது போல இருந்தது.

அனைத்து கதைகளுக்கும் ஒரு இணைப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.

படத்தின் அலசல்:

எல்லா பருவத்திலும் மனிதனுக்கு அன்பு தேவை என்பதை அழகாக குட்டி குட்டி கதைகளாக கூறி உள்ளார் இயக்குனர். படம் முழுக்க முழுக்க அடுத்து என்ன ஆகும் என்ற சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. இயல்பான வாழ்க்கையை பார்வையாளர்களுக்கு கச்சிதமாக காட்டி உள்ளார் இயக்குனர்.
மொத்தத்தில் “சில்லுக்கருப்பட்டி படம் அட்ராசிட்டி படமாகும்”.

Advertisement