பிரபல நடிகை அபிநயா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மிக அழகான முகம், தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேசாத, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியினாலும் சினிமாவில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அபிநயா.
அதுமட்டுமில்லாமல் இவரால் சரியாக வாய் பேச முடியாது என்பதே நாடோடிகள் படம் வெளியான பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. அதற்குப் பிறகு மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு, வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23, மார்க் ஆண்டனி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமானார். தற்போது இவர் கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
அபிநயா பேட்டி:
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், அபிநயா சைகை மொழி மூலம் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில் 33 வயதாகும் நடிகை அபிநயா இன்னமும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. நீங்கள் சிங்கிளா அல்லது யாருடனாவது மிங்களா, உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன? என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அபிநயா வெட்கத்தோடு, தான் 15 வருடங்களாக தன்னுடன் படித்த சிறு வயது நண்பரை காதலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
15 வருட காதல்:
மேலும், தனது நீண்ட நாள் காதலரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அபிநயா அறிவித்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அதோடு பூஜை மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் விஷாலுடன் இணைந்து நடித்த நடிகை அபிநயாவை விஷால் திருமணம் செய்து கொள்ளப் போவதாக எல்லாம் ரூமர்கள் கிளம்பியது, இது குறித்து பதில் அளித்த அபிநயா அதெல்லாம் கொஞ்சம் கூட உண்மை இல்லை என அழகாக தனது சைகை மொழி மூலம் கூறியுள்ளார்.
பணி திரைப்படம்:
மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலையாளத்தில் அபிநயா நடிப்பில் வெளியான ‘ பணி’ திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் சமீபத்தில் தான் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் கூட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு இவரை பாராட்டி இருந்தார்கள்.
பட வாய்ப்புகள்:
மேலும், பணி படத்தை ஜோஜு ஜார்ஜ் இயற்றி அபிநயாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனது மனைவியை கொடூரமாக சீரழித்தவர்களை தேடி பிடித்து ஜோஜூ ஜார்ஜ் பழி வாங்குவது தான் படத்தின் கதை. குறிப்பாக இந்த படத்தில் பலாத்கார காட்சிகளை எல்லாம் ஜோஜு பயங்கர போல்டாக இயக்கியிருக்கிறார். அந்தக் காட்சியில் அபிநயாவை பார்த்து ரசிகர்கள் இவர் இவ்வளவு போல்டாக நடிப்பாரா என ஷாக் ஆகிவிட்டனர். பனி படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்க இவருக்கு அழைப்புகள் வருவதாகவும் அபிநயா தெரிவித்துள்ளார்.