நடிகை அபிநயாவின் திருமண புகைபடங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அபிநயா. ‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிநயா. மிக அழகான முகம், தோற்றம் உடைய அபிநயா அவர்களுக்கு இயற்கையிலேயே சரியாக வாய் பேச வராது, காது கேட்கும் திறன் குறைபாடு உடையவர். இருந்தாலும் இவருடைய தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியினாலும் சினிமாவில் தன் நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அபிநயா.
அதுமட்டுமில்லாமல் இவரால் சரியாக வாய் பேச முடியாது. இது நாடோடிகள் படம் வெளியான பின்னர் தான் பலருக்கும் தெரிந்தது. அதற்குப் பிறகு இவர் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு, வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23, மார்க் ஆண்டனி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் தான் அறிமுகமானார்.
அபிநயா திரைப்பயணம்:
தற்போது இவர் கன்னடா, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலையாளத்தில் அபிநயா நடிப்பில் வெளியான ‘ பணி’ திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட பலரும் அபிநயாவை பாராட்டி இருந்தார்கள். பனி படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்கிறார்.
அபிநயா குறித்த தகவல்:
அந்த வகையில் தற்போது நடிகை அபிநயா அவர்கள் தமிழில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, மீனா, மைனா நந்தினி, இனியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய பூஜை பிரம்மாண்டமாக நடந்து முடிந்திருந்தது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தான் தயாரிக்கிறார்.
அபிநயா திருமணம் சர்ச்சை:
இதற்கிடையில் அபிநயா அவர்கள் நடிகர் விஷாலை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் இணையத்தில் வைரலாக பரவி இருந்தது. இதற்கு அபிநயா, விஷால் என்னுடைய நல்ல நண்பர். அவரை நான் திருமணம் எல்லாம் செய்யவில்லை. சிறு வயதில் இருந்தே என்னுடைய நெருங்கிய நண்பரை தான் நான் காதலித்து வருகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் யார் என்று சொல்லவில்லை. இதை அடுத்து சமீபத்தில் தான் அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
அபிநயா திருமணம்:
இவருடைய நீண்ட நாள் காதலர் சன்னி வர்மா. இவர் பெரிய தொழிலதிபர். அவருக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள், இறால் ஏற்றுமதி நிறுவனம், பார், ஹோட்டல் பிஸ்னஸ் என பல தொழில்கள் இருக்கிறதாம். இப்படி இருக்கும் நிலையில் இன்று அபிநயாவிற்கு திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுடைய திருமணம் ஹைதராபாத் தங்களுடைய குடும்ப பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. மணமகள் இருவருமே பாரம்பரிய உடை அணிந்து இருந்தார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படம் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.