லாக்டவுனில் ஏறிய உடல் – ஜிம்மிற்கு செல்லும் நேரம் வந்துவிட்டது – பாவனா பதிவிட்ட புகைப்படம்.

0
1389
bhavana
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. இவர் தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் தீபாவளி, அசல், வெயில், ஜெயம் கொண்டான், கூடல் நகர் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை பாவனா அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதிலும் இவர் அதிகமாக மலையாள மொழி படங்களில் நடித்து உள்ளார். கடந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இது அனைவருக்கும் தெரிந்த அன்று.

-விளம்பரம்-

இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து மலையாள திரையுலகில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் தான் நடிகை பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார்.

- Advertisement -

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுத்துஇருந்தார் . தமிழில் விஜய் சேதுபதி– திரிஷா நடிப்பில் வெளியான “96” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்து இருந்தார்கள். இந்த படத்தில் நடிகை பாவனா அவர்கள் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இந்த படம் கன்னடத்திலும் நல்ல பெயரை வாங்கி தந்தது. இந்நிலையில் நடிகை பாவனா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

தற்போது 4 கன்னட படங்களில் நடித்து வருகிறார் பாவனா. இப்படி ஒரு நிலையில் நடிகை பாவனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு, குண்டாவதை போல அனைத்தும் எளிமையாக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன், லாக்டவுனுக்கு முன் ஏறிய உடல், ஜம்மிற்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

-விளம்பரம்-
Advertisement