இவங்க எல்லாம் அக்கா, தங்கச்சி கூட பொறக்கலையா? – நடிகைகளின் பிரைவேசியில் தலையிடுவோரை விளாசிய அதிதி பாலன்

0
250
- Advertisement -

பிரபல நடிகை அதிதி பாலனின் பேட்டிதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ‘அருவி’ படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது. மேலும், இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பும், விமர்சனமும் கிடைத்தது. இந்தப் படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்கள் தான் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

முழுக்க முழுக்க ‘சமூக-அரசியல்’ உள்ள திரைப்படமாக அருவி இருந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை அழகாக சித்தரித்திருந்தார் இயக்குனர். இந்தப் படம் நுகர்வியம் மற்றும் பெண் வெறுப்புக் கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்புகளில் இருந்து வெளிப்படையை விளக்குகின்ற கதையாகும். மேலும், வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் வலி, சமூகத்தில் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளினால் பாதிக்கப்படும் பெண்ணின் நிலை. அதனை, அந்தப் பெண் எவ்வாறு எதிர்கொண்டு போராடுகிறார் என்பது தான் அருவின் கதை.

- Advertisement -

அதிதி குறித்து:

அதிதி பாலன் அருவி படத்திற்கு முன்பே அஜித் அவர்களின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அதிதி நடித்தார். அதேபோல் நானி, பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நானியின் அக்காவாகவும் நடித்திருந்தார்.

அதிதி பாலன் பேட்டி:

இந்நிலையில் அதிதி பாலன் சமீபத்தில் நடிகைகளின் பிரைவேசி விஷயங்களில் தலை இடுபவர்களை குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் அவர் , நான் அருவி படத்திற்காக ஏழு கிலோ வரை எடை குறைத்து நடித்தேன். அந்தக் கிளைமாக்ஸ் காட்சியில் எல்லாம் கேமரா மேன் கேமராவை செட் செய்து விட்டு சென்று விட்டார். இயக்குனரும் நானும் ஒரு குடிசை வீட்டில் இருந்து அந்த காட்சியை படமாக்கினோம். அந்த காட்சியை ஒரு டேக்கிலே நான் நடித்து முடித்தேன். அந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

-விளம்பரம்-

அம்மா, அக்கா, தங்கச்சி இல்லையா?:

பின்பு அந்த படத்தை பார்த்த பின்பு தான், கஷ்டப்பட்டால் தான் வெற்றி கிடைக்கும் என்பதையும் புரிந்து கொண்டேன். மேலும், ஒரு சிலர் நடிகைகளின் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் லைக் போட்டு விட்டு, அதற்கு கீழ் ஆபாச கமெண்ட் செய்து வருகின்றனர். போட்டோக்களை இடுப்பு பகுதி, க்ளீவேஜ் தெரிந்தால் அதையெல்லாம் ஜூம் செய்து மோசமான சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் அக்கா, அம்மா, தங்கை என்று யாருமே இருக்க மாட்டார்களா என்கிற கேள்வி எனக்கு எப்போதுமே எழும்.

அதிதி பாலன் ஆவேசம்:

அதை தொடர்ந்து அவர், பெண்களின் பிறப்புறுப்பில் தானே பிறக்கிறாங்க அந்த இடத்தையே அசிங்கமா பேசவும், சித்தரித்துப் பார்க்கவும் எப்படி அவர்களுக்கு மனசு வருகிறது. அவர்களெல்லாம் மனநிலை சரியாக உள்ளவர்களா? இல்லை லூசா என்று கூட எனக்கு தெரியவில்லை ‌ நடிகைகள் என்றாலே தப்பா கமென்ட் போடுவது, அசிங்கமாக பார்ப்பது என மோசமாகி விடுகின்றனர். இவர்களை எல்லாம் பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள் என அதி திபாலன் ஆவேசமாக பேசியுள்ளார்.

Advertisement