மணிரத்னம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக கொடிகட்டி பறப்பவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் ரோஜா. இந்த படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா, ஜனகராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பாளராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் இருந்தது. இந்த படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.
ரோஜா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை:
இந்த நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த படக்கதையை எழுதியதும் நாயகியாக நடிக்க வைக்க முதலில் லட்சுமி மகள் ஐஸ்வர்யாவை தான் மணிரத்னம் கேட்டிருந்தார். ஆனால், அப்போது தெலுங்கு படத்திற்காக முன்பணம் வாங்கி விட்டதால் மணிரத்தினம் படத்தில் நடிக்க முடியாது என்று ஐஸ்வர்யாவின் பாட்டி கூறியிருந்தார்.
ஐஸ்வர்யா அளித்த பேட்டி:
மேலும், இதுகுறித்து நடிகை ஐஸ்வர்யா ஒரு பேட்டியில் கூறியிருந்தது, ரோஜாவில் நடிக்க தேதி இல்லை என தெலுங்கு படத்தில் நடித்தேன். ஆனால், அந்தப் படம் டிராப் ஆனது. திரையில் ரோஜா படத்தை பார்த்தபோது தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டது போல் இருந்தது என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒருவேளை இந்த படத்தில் ஐஸ்வர்யா நடித்து இருந்தால் அவருடைய திரைப்பயணம் மாறி இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
ஐஸ்வர்யாவின் திரைப்பயணம்:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சாந்தா மீனா. திரையுலகில் தன்னுடைய பெயரை ஐஸ்வர்யா என மாற்றிக் கொண்டார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து இருக்கிறார்.
ஐஸ்வர்யாவின் தற்போதைய நிலை:
பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா பங்கு பெற்று வருகிறார். விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக ஐஸ்வர்யா பங்கேற்றிருந்தார். தற்போது இவர் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.