கங்குவா படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் படத்தில் பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அதோடு இந்த படம் குறித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை சொல்லி இருந்தார்கள். குறிப்பாக, இந்த படத்தில் நிறைய சத்தம் தான் கேட்கிறது என்று எல்லாம் ட்ரோல் செய்து இருந்தார்கள்.
கங்குவா படம்:
மேலும், கங்குவா படத்தை விமர்சிப்பதை விட சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும் ஜோதிகா, சூரி, சுசீந்திரன், சரவணன், மிஸ்கின் என பல பிரபலங்கள் சூர்யாவிற்கு ஆதரவாக பேசி இருந்தார்கள். இந்த நிலையில் கங்குவா குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டிருந்தார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி:
அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தை நான் பார்க்கவில்லை. ஆனால், என்னுடைய அம்மா பார்த்தார்கள். என்னுடைய அம்மாவுக்கு படம் ரொம்ப பிடித்து இருக்கிறது. அவர், படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னார். கங்குவா படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று அவசியம் கிடையாது. சில படங்கள் பிடிக்கும், சில படங்கள் பிடிக்காமல் இருக்கும். அந்த மாதிரி இருக்கும்போது யாரையும் புண்படுத்தாமல் ஒரு விஷயத்தை சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
கங்குவா குறித்து சொன்னது:
பிடிக்கவில்லை என்பது சொல்வது தப்பு கிடையாது. பிடிக்கவில்லை என்பதை யாரையும் கட்டாயப்படுத்தாமல் சொல்லலாம். ஆனால், சொல்ற விதம் என்று ஒன்று இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.
இப்படி இவர் பேசியிருப்பதை தான் நெட்டிஷன்கள் கிண்டல் கேலி செய்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்த தகவல்:
இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.